பிகேஆர்: என்எப்சி எளிய கடன் தொடர்பில் அரசாங்கம் 163 மில்லியன் ரிங்கிட்டை இழக்கலாம்

news09713fஎன்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழலில் அரசாங்கம் 163  மில்லியன் ரிங்கிட்டை இழக்கக் கூடும் என பிகேஆர் வியூக இயக்குநர்  ராபிஸி  ராம்லி கூறுகிறார்.

அரசாங்கம் பறிமுதல் செய்த என்எப்சி சொத்துக்கள் மதிப்பு 18 மில்லியன் ரிங்கிட்  என அவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

அந்த நிறுவனத்துக்கு அரசாங்கம் அனுமதித்த 250 மில்லியன் ரிங்கிட் எளிய  கடனில் 181 மில்லியன் ரிங்கிட் கொடுக்கப்பட்டுள்ளதால் எனவே அந்தக் கடனில்  69 மில்லியன் ரிங்கிட் காப்பாற்றப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

என்எப்சி திவாலாகி விட்டதாக அறிவிக்கப்படுமானால் எஞ்சியுள்ள 163 மில்லியன்  ரிங்கிட்டை மீட்பது முடியாத காரியமாகி விடும் என்றார் ராபிஸி.

திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட்டால் என்எப்சி நடவடிக்கைகள் நிறுத்தப்படும்  என்பதே அதற்குக் காரணமாகும். அத்துடன் என்எப்சி இயக்குநர்கள் தனிப்பட்ட  உத்தரவாதங்களைக் கொடுக்கவும் இல்லை.