மந்திரி புசார் காலித்: நியமனத்துக்கு முந்திய சொத்துக்களை அறிவிக்க வேண்டாம்

news09713eசிலாங்கூர் மாநில ஆட்சி மன்றத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள  உறுப்பினர்கள் தங்கள் நியமனத்துக்கு முன்னர் பெற்ற சொத்துக்களை அறிவிக்க  வேண்டியதில்லை என மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் கூறியுள்ளார்.

பாதுகாப்பு காரணங்கள் அடிப்படையில் அவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளதாக  அவர் சொன்னார்.

புதிய ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிக் காலத்தில் தங்கள்
சொத்துக்களில் ஏற்படும் மாற்றத்தை பற்றி அறிவித்தால் போதும் என அவர்  சொன்னதாக சின் சியூ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

நியமனத்துக்கு முன்னதாக அவர்களிடம் இருந்த சொத்து விவரங்கள் மாநில  அரசாங்கம் எதிர்கால மேற்கோள்களுக்காக வைத்திருக்கும். ஆனால் அவை  பொது மக்களுக்கு அறிவிக்கப்பட மாட்டது என காலித் விளக்கினார்.

“தங்கள் சொத்துக்கள் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டால் தங்களுடைய
பாதுகாப்புக்கும் குடும்பங்களுடைய பாதுகாப்புக்கும் மிரட்டல் ஏற்படும் என்பதை  சில ஆட்சி மன்ற உறுப்பினர்கள் சுட்டிக் காட்டிய பின்னர் நான் அந்த  ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொண்டேன்,” என்றும் அவர் சொன்னார்.