1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்தை ரத்துச் செய்வதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அளித்த வாக்குறுதியை அரசாங்கம் காப்பாற்ற வேண்டும் என கெரக்கான் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
“காலத்திற்கு ஒவ்வாத ஒடுக்குமுறையான” அந்தச் சட்டம் மறு பதிப்பாக வரக் கூடாது என்றும் அது போன்ற இன்னொரு சட்டத்தை வரைவதற்கு முன் மாதிரியாகவோ எடுத்துக் கொள்ளப்படக் கூடாது என்றும் அதன் இடைக்காலத் தலைவர் சாங் கோ யொன் கூறினார்.
அந்தச் சட்டத்தை ரத்துச் செய்வதின் மூலம் அரசாங்கம் பிரஜைகளுக்கு விரிவான ஜனநாயக இடத்தை கொடுக்க முடியும் என்றார் அவர்.
அந்தச் சட்டத்தை ரத்துச் செய்தால் மலாய் ஆட்சியாளர்கள்
அவமானப்படுத்தப்படக் கூடும் என உள்துறை அமைச்சஎ அகமட் ஸாஹிட் ஹமிடி சொல்வதை சாங் ஏற்றுக் கொள்ளவில்லை.
“மலாய் ஆட்சியாளர்கள் வெளிப்படையாக அவமானப்படுத்தப்படுவதை
தடுப்பதற்கு குற்றவியல் சட்டத்தில் போதுமான விதிகள் உள்ளன,” என்றார் அவர்.