அரசாங்கத்தின் ஊழல் தடுப்பு முயற்சிகள் மீதான பொது மக்கள் நம்பிக்கை சரிகின்றது

news09713aஊழலை துடைத்தொழிப்பதில் அரசாங்கத்தின் திறமை குறித்த மக்கள் எண்ணம்  குறிப்பிடத்தக்க அளவு சரிந்துள்ளது.

மலேசிய அனைத்துலக வெளிப்படைக் கழகத்தின் உலக ஊழல் அளவுகோல்  அவ்வாறு கூறுகிறது.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கம் திறமையாக நடந்து கொள்கிறது  என 2012 செப்டம்பர் மாதத்திற்கும் 2013 மார்ச் மாதத்திற்கும் இடையில் பேட்டி  காணப்பட்டவர்களில் 31 விழுக்காட்டினர் மட்டுமே நம்புகின்றனர். அந்த விகிதம்
2011ம் ஆண்டு 49 விழுக்காடாக இருந்தது.

அந்த வகையில் அரசாங்கத்தின் திறன் பற்றி 2009ம் ஆண்டு 28 விழுக்காட்டினர்  நம்பிக்கை தெரிவித்தனர்.

அந்த விதம் 2006ல் 45 விழுக்காடாகவும் 2007ல் 53 விழுக்காடாகவும் 2010ல் 48  விழுக்காடாகவும் இருந்தது. 2008, 2010ம் ஆண்டுகளுக்கான விவரம் இல்லை.

TAGS: