எம்பி: ரயில் திட்டம் பிரதமரது வாக்குறுதிக்கு முரணாக உள்ளது

najib-razak bஜோகூர் இஸ்காண்டார் மலேசியாவில் 20 நிலையங்களை உள்ளடக்கிய புதிய  ரயில் முறையை நிர்மாணிக்கும் குத்தகை நேரடிப் பேச்சுக்கள் மூலம்  வழங்கப்பட்டுள்ளது, பிரதமர் வாக்குறுதி அளித்துள்ள திறந்த டெண்டர் முறைக்கு  முரணாக உள்ளது என டிஏபி எம்பி டோனி புவா சொல்கிறார்.

அந்த ரயில் திட்டம் Masteel எனப்படும் Malaysian Steel Works நிறுவனத்துக்கு  வழங்கப்பட்டுள்ளது.

வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும் ஊழலை தடுக்கவும் திறந்த டெண்டர்  முறையில் குத்தகைகள் வழங்கப்படும் என 13வது பொதுத் தேர்தலில் நஜிப்  அளித்த வாக்குறுதியை அது மீறுகிறது என்றும் புவா குறிப்பிட்டார்.

“அந்தத் திட்டத்துக்கு நேரடிப் பேச்சுக்கள் வழி எந்த அடிப்படையில் Masteel  தேர்வு செய்யப்பட்டது ? இவ்வளவு பெரிய திட்டத்துக்கு அரசாங்கம் ஏன் திறந்த  டெண்டர் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை ?” என்றும் அவர் வினவினார்.

“அத்துடன் எளிய கடன் மூலம் அதன் கட்டுமானத்தில் 70 விழுக்காடு செலவுகளை  அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் போது அந்தத் திட்டத்தை தனியார் மயமாக்க  வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது,” என புவா மேலும் சொன்னார்.

TAGS: