‘பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை மீது மசீச-வும் மஇகா-வும் இன விளையாட்டை நடத்துகின்றன’

01713bgpicபல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு இடமளிக்கப்பட்ட விவகாரத்தை மசீச-வும்  மஇகா-வும் இன விஷயமாக்கி தாங்கள் நிலைத்திருப்பதற்கு சார்பு நிலையை  தொடர்ந்து வருவதாக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார்.

அந்த நிலை தேர்ச்சி பெற்ற நாட்டின் ஆற்றலுக்குப் பாதகமானது என அதன்  சொன்னார்.

“பல்கலைக்கழகங்களில் இடம் கொடுக்கப்படாததை அவை இன கண்ணோட்டத்தில்  தான் பார்க்கின்றன. உண்மையில் சம வாய்ப்பு, திறமை, அடைவு நிலை  ஆகியவற்றின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களில் இடங்கள் வழங்கப்பட  வேண்டும்.”

“மசீச-வும் மஇகா-வும் பல்கலைக்கழக நுழைவுக்கான தகுதிகள் வெளிப்படையாக  இருக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.”

தகுதி பெற்ற மாணவர்களுக்கு உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஏன் இடம்  கிடைக்கவில்லை என்பது மீது அவ்விரு கட்சிகளும் கவனம் செலுத்த வேண்டும்  என்றும் லிம் சொன்னார்.

பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள  போதிலும் ஏன் இவ்வாண்டு சீன, இந்திய மாணவர்கள் குறைவான  எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டது மீது மசீச-வும் மஇகா-வும்  கேள்வி  எழுப்பியுள்ளன.