கடலோர நிலம் தொடர்பில் பாஸ் துணைப் பிரதமருக்குச் சவால்

news17713bதிரங்கானுவில் நான்கு பிஎன் பேராளர்களுக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படும்  கடலோர நிலத்தை மீண்டும் எடுத்துக் கொள்ளுமாறு திரங்கானு மந்திரி புசார்  அகமட் சைட்-டுக்கு துணைப் பிரதமர் முஹைடின் யாசின் உத்தரவிட வேண்டும் என பாஸ் மத்தியக் குழு உறுப்பினர் டாக்டர் சுல்கெப்லி அகமட் சவால்  விடுத்துள்ளார்.

அந்த நிலம் ‘மிகவும் மதிப்பு வாய்ந்த சொத்து’ என்பதால் அது மாநில
அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

அவ்வாறு செய்வதின் மூலம் ‘மக்களுக்கு முதலிடம்’ என்ற பிஎன் சுலோகத்துக்கு  தான் மதிப்பளிப்பதை பிஎன் வழி நடத்தும் மாநில அரசாங்கம் நிரூபிக்க முடியும்  என சுல்கெப்லி இன்று கோலா பெசுட்டில் நிருபர்களிடம் கூறினார்.

பெசுட்டில் கடலோரத்தில் நான்கு பிஎன் தலைவர்களுக்கு தலா ஒரு ஹெக்டர்  நிலம் கொடுக்கப்பட்டுள்ளதாக பாஸ் கூறிக் கொண்டுள்ளது.

பெசுட் எம்பி இட்ரிஸ் ஜுசோ, முன்னாள் பெசுட் எம்பி அப்துல்லா முகமட் ஜின்,  உலு பெசுட் சட்டமன்ற உறுப்பினர் நாவி முகமட், முன்னாள் கோத்தா புத்ரா  சட்டமன்ற உறுப்பினர் முகமட் பெஹிமி யூசோப் ஆகியோரே அந்த நால்வர் என பாஸ் பெயர் குறிப்பிட்டுள்ளது.