முன்னாள் ஐஜிபி: ஏஜி சொல்வது தப்பு, தடுப்புச் சட்டம் தேவைதான்

igpகடந்த ஆண்டு அகற்றப்பட்ட 1969 அவசரக்காலச் சட்ட(இஓ)த்துக்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் எந்தவொரு சட்டமும் தடுப்புக்காவலில் வைப்பதற்கும் இடமளிக்க வேண்டும் என்கிறார் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப்துல் ரஹிம் நூர்.

“இஓ  எடுக்கப்பட்டதும் குண்டர்கும்பல் சம்பந்தப்பட்ட வன்முறைக் குற்றங்கள் பெருகியிருப்பதைப் பார்க்கிறோம். போலீசாரால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்களின் கைகள் கட்டப்பட்டுக் கிடக்கின்றன.

“மனித உரிமைகளுக்குப் போராடும் என்ஜிஓ-களும் சட்டத்துறை அலுவலகமும் (ஏஜி) குற்றத்தடுப்புப் பணியில் ஈடுபடுவதில்லை அதனால் அவர்களுக்கு உண்மைநிலை தெரியவில்லை”, என மிங்குவான் மலேசியாவுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறினார்.