வேள்பாரி மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டது மீது அரசு சாரா இந்திய அமைப்புக்கள் கூட்டணி வருத்தம்

vellpariமஇகா-வில் வலிமை வாய்ந்த மத்திய செயற்குழுவிலிருந்து எஸ் வேள்பாரியை  கட்சித் தலைவர் ஜி பழனிவேல் நீக்கியிருப்பது குறித்து அரசு சாரா இந்திய  அமைப்புக்கள் கூட்டணி ஒன்று வருத்தம் தெரிவித்துள்ளது.

துணிச்சலுடன் பேசிய சில மஇகா தலைவர்களில் வேள்பாரியும் ஒருவர் என வர்கா  அமான் தலைமைச் செயலாளர் எஸ் பாரதிதாசன் ஒர் அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளார்.

இந்து சமயத்தை இழிவுபடுத்திய பெர்க்காசா உதவித் தலைவர் சுல்கிப்லி நூர்டின்  விரிவுரையாளரான ரித்துவான் தீ அப்துல்லா ஆகியோர் சம்பந்தப்பட்ட  விவகாரங்களில் வேள்பாரி துணிச்சலாக பேசினார் என அவர் மேலும் சொன்னார்.

“தடுப்புக் காவல் மரணங்கள் குறித்தும் பேசியுள்ள அவர் வர்கா அமான் தலைவர்களையும் உள்ளடக்கிய குழு ஒன்றுக்கு தலைமையேற்று பிரதமர் துறை  அமைச்சர் பால் லாவ்-வைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பின் போது IPCMC என்ற  போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையத்தை  அமைக்கும் யோசனை வலியுறுத்தப்பட்டது.”

இந்திய சமூகம், அனைத்து மலேசியர்கள் ஆகியோரது நல்வாழ்வு மீது வேள்பாரி  கொண்டுள்ள அக்கறையைக் கண்டு வர்கா அமான் பெருமை கொள்கிறது என்றும்  பாரதிதாசன் சொன்னார்.