டிஏபி, அதன் மத்திய செயலவை (சிஇசி) தேர்தல் செல்லாது என சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) எழுத்துப் பூர்வமாக தெரிவிக்குமுன்னர் உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி அதை அறிவித்ததால் கொதிப்படைந்துள்ளது.
அஹமட் ஜாஹிட் நேற்று புத்ரா ஜெயாவில் நோன்பு திறக்கும் நிகழ்வு ஒன்றில் அதை அறிவித்தார்.
“அதைத் தெரிவிக்கும் ஆர்ஓஎஸ் கடிதம் எதுவும் எங்களுக்கு வரவில்லை. செய்திதாளைப் பார்த்துதான் தெரிந்து கொண்டோம்”, என மத்திய செயலவை உறுப்பினர் அந்தோனி லோக் கூறினார்.
அது பற்றி விளக்கம்பெற அவர் இன்று ஆர்ஓஎஸ் தலைமையகத்துக்குச் சென்றார்.
மேற்கொண்டு கருத்துரைக்க மறுத்த லோக், இன்றிரவு சிஇசி கூட்டத்தில் அது விவாதிக்கப்படும் என்றார்.
கல்யாண பரிசு அல்ல , ஹரிராயா பரிசாக கொடுக்கவே கால தாமதம் செய்வது போல் தெரிகிறது. நான் சொல்லவில்லை , ஜசெக மூத்த தலைவர் சொன்னது. இதுதான் நேரம் பார்த்து அடிப்பதோ???
டிஏபி சீனர் ஆதிக்கக் கட்சியாக மாறுவது சரியில்லை
மத்திய செயலவை [சிஇசி] தேர்தலை DAP மீண்டும் நடத்துமேயானால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். ஆனால், நடப்பில் உள்ள தலைவர்கள் மறுதேர்தலை நடத்த நடுங்குகிறார்கள். முன்பு சிஇசி தேர்தலில் ‘ஜெயித்த’ பாதிப்பேர் வீட்டுக்கு போக வேண்டிவரும். குலா கடை திறக்கவேண்டியதுதான். பேராசிரியர் ராமசாமி வெற்றி பெறுவார். DAP அருமையான கட்சி. அதில் உள்ள ஒரு சில சர்வதிகாரிகளால், அது சீர்குழைந்து வருகிறது. மேலும் விபரம் பெற விரும்புவோர், The Equity Report என்ற சிறிய நூலை படித்துப் பாருங்கள்.
முந்திரிகொட்டை மந்திரி. ஓர் அரசாங்க அமைப்பை விட தனி மனிதனான மந்திரியின் கை ஓங்கியிருக்கிறது. இதுவா ஜனநாயகம்? இது சர்வதிகாராம்.