சுப்ரா நிகழ்வைப் புறக்கணித்ததாக கூறப்படுவதை பினாங்கு மஇகா தலைவர் மறுக்கிறார்

MICபுக்கிட் ஜம்புலில் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் நேற்றிரவு  நடத்திய நிகழ்வில் மாநில மஇகா தலைவர் எஸ் கருப்பண்ணனும் பல கிளைகளும்  கலந்து கொள்ளாதது ‘புறக்கணிப்பு’ நடவடிக்கை என்னும் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அந்த நிகழ்வைத் தாம் புறக்கணித்ததாக கூறப்படுவதை தொடர்பு  கொள்ளப்பட்ட போது கருப்பண்ணன் மறுத்தார். தாம் அந்த நிகழ்வில் கலந்து  கொள்ள முடியாது என ஏற்கனவே சுப்ரமணியத்திடம் தெரிவித்து விட்டதாகவும்  அவர் சொன்னார்.MIC1

எதிர்வரும் கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு நடப்பு துணைத் தலைவரான சுப்ரமணியம், நடப்புத்  தலைவர் ஜி பழனிவேலை எதிர்த்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.  அதனால் மஇகா வட்டாரங்களில் பரபரப்பு அதிகமாகியுள்ளது. ஊகங்களும்
வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் என்பதால் அந்த விருந்தில் கலந்து கொள்ள  வேண்டாம் என கிளை உறுப்பினர்களுக்கு அந்த விருந்து பல நாட்கள் முன்னதாக  தெரிவிக்கப்பட்டது என மாநில மஇகா உயர் நிலைத் தலைவர் கூறினார்.

அதனால் மொத்தமுள்ள 274 கிளைகளில் 180 மட்டுமே அந்த நிகழ்வில் கலந்து  கொண்டன.

ஆனால் சுப்ரமணியம் தமக்கு ஆதரவு தேடும் பொருட்டு சுப்ரமணியம்
பினாங்கிற்கு சென்றதாக கூறப்படுவதை முன்னாள் மாநில மஇகா இடைக்காலத்  தலைவர் எல் கிருஷ்ணன் மறுத்தார்.

“சுகாதார அமைச்சருமான மஇகா துணைத் தலைவர் விருந்து ஒன்றில் கலந்து  கொண்டு உறுப்பினர்களைச் சந்திப்பதில் எந்தத் தவறும் இல்லை,” என அவர்  சொன்னார்.