‘balik China, India’ எனச் சொன்னதாக கூறப்படுவதை கல்வி அமைச்சு விசாரிக்கும்

schoolsஇடைநிலைப் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர் ஒருவர் இனவாதக் கருத்துக்களை  தெரிவித்ததாக கூறப்படுவதை கல்வி அமைச்சு விசாரிக்கும் என கல்வித் துணை  அமைச்சர் பி கமலநாதன் அறிவித்துள்ளார்.

அந்த விவகாரம் அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றும்  உடனடியாக விசாரணை தொடங்கப்படும் என்றும் மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள  குறுஞ்செய்தியில் அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

“நாங்கள் அத்தகைய நடத்தையை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அந்தக்
குற்றச்சாட்டு உண்மை என்றால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை
எடுக்கப்படும்,” என்றார் அவர்.schools1

அந்தச் சம்பவம் பற்றி பெற்றோர்கள் தம்மிடம் புகார் செய்துள்ளதாக ஷா அலாம்  மஇகா தொகுதித் தலைவர் ஏ பிரகாஷ் ராவ் கூறிக் கொண்டுள்ளதற்கு கமலநாதன்  பதில் அளித்தார்.

சீன, இந்திய மாணவர்களை நோக்கி “balik India dan China” (இந்தியாவுக்கும்  சீனாவுக்கும் திரும்பிப் போங்கள்) என அலாம் மெகா தேசிய இடைநிலைப்  பள்ளியின் தலைமை ஆசிரியர் திட்டியதாகப் பிரகாஷ் சொன்னார்.

பள்ளிக்கூட ஒன்று கூடும் நிகழ்வில் தாம் உரையாற்றிக் கொண்டிருந்த போது  மாணவர்கள் சத்தம் போட்டுக் கொண்டிருந்ததால் தலைமை ஆசிரியர்  ஆத்திரமடைந்தார் எனப் பெற்றோர்கள் தெரிவித்தனர்.