கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சு, இஸ்லாம் அல்லாத பிற வழிபாட்டு மையங்களுக்கு ஆலோசனை மன்றம் ஒன்றை அமைக்கும்.
அந்த மையங்களைக் காலி செய்வதற்கான நோட்டீஸ்கள், அவற்றைக் கட்டுவதற்கான பகுதிகளை உறுதி செய்வது போன்ற விஷயங்களை அந்தக் குழு ஆராயும் என அதன் துணை அமைச்சர் ஜே லோக பாலன் கூறினார்.
பல இன சமூகத்தின் சமய உணர்வுகளைக் கவனத்தில் கொண்டு இடங்களைக் காலி செய்வதற்கு அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கையையும் அந்தக் குழு விசாரிக்கும் என்றும் அவர் சொன்னார்.
“தற்போது ஆலோசனைக் குழுவில் அரசு சார்பற்ற அமைப்புகளைச் சார்ந்த சமயப் பேராளர்கள் இடம் பெற்றுள்ளனர். அரசியல்வாதிகளுக்கு அது திறக்கப்படவில்லை,” என இன்று மேலவையில் கேள்வி நேரத்தின் போது லோக பாலன் பேசினார்.
வழிபாட்டு மையங்களைக் காலி செய்வதற்கு அமலாக்கக் குழுக்கள் நடவடிக்கை எடுக்கும் முன்னர் நில, சுரங்கத் துறை ஒதுக்கியிருக்கும் நிலத்தைப் பற்றி அறிய விரும்பிய செனட்டர் சியூ லியான் கெங்-கிற்கு அவர் பதில் அளித்தார்
பெர்னாமா
அந்த மையங்களைக் காலி செய்வதற்கான ஒரு ஆலோசனை மன்றம் உங்களுக்குத் தேவைப்படுகின்றது. அவ்வளவு தானே! இதற்கு ஏன் நீட்டி முழக்கி எதையோ சாதிக்கப் போவது போல் பேசுகிறீர்கள். ஆமாம் சாமி போடுவதற்கு ஒரு மன்றம்! அவ்வளவு தான்!
1. இந்த ஆலோசனை மன்றத்தை வழிநடத்துபவர் யார்? ஓர் இஸ்லாமியரா?
2. இந்த ஆலோசனை மன்றத்தில் ஓர் அர்ச்சகர் அல்லது மதப்பற்றாளர் இருப்பாரா?
3. இந்த ஆலோசனை மன்றத்தில் அரசியல்வாதிகள் இருக்கமாட்டார்கள் என்றால் அரசியல் தலையீடு இருக்குமா?
கண்டிப்பாக அதில் மோகன் ஷாண் இடம் பெற்றிருப்பார்.. அவர் ஒரு முருக பக்தர்.. பழனிவேல், சரவணன், சுப்பிரமணியம் எல்லாரும் அவரது இஷ்ட்ட தெய்வங்கள்.. அவர்களைக் கேட்டுத்தான் இவர் வாயை திறப்பார்.. அப்புறம் என்னத்திற்கு இப்படி ஒரு மன்றம்..?