பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அரசாங்கம் குற்றச்செயல்களைக் குறிப்பாக கடுமையான குற்றங்களை எதிர்ப்பதற்கு போலீசுக்கு தேவையான அனைத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறது என்று கூறினார்.
துப்பாக்கிகளைப் பயன்படுத்தி கொலைசெய்யும் சம்பவங்கள் அதிகரித்துவருவது பற்றிக் கவலை தெரிவித்த அவர், அது மக்களின் நம்பிக்கையைப் பாதித்து அச்சத்தை அதிகரித்துள்ளது என்றார்.
மக்களின் நம்பிக்கையைப் பெற போலீசார் உடனடியாக செயல்பட வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.
அனைத்தும் கொடுங்கள் ,அதிகாரத்தையும் கொடுங்கள் ,போலிஸ் ரகசியத்தை அம்பல படுத்த துணிந்தால் சுட்டும் தள்ளுங்கள் ,பெரிய தொகை கிடைத்தால் அமுக்கி வாசியுங்கள் ,இல்லாதவனை போள்ளதவனென்று குற்றம் சாட்டுங்கள் .குண்டர் தலைவன் நோட்டை வீசினால் சுகந்திரம் கொடுங்கள் .சுட்டு வீழ்த்திய பின் பத்திரிகைக்கு பேட்டி கொடுங்கள் .
குற்றங்களை புரிபவனே எப்படி குற்றங்களை எதிர்ப்பான் ! நீ இன்னும் அள்ளிக்கொடு. குற்றங்கள் இன்னும் பெருகட்டும். இதென்ன உன் பணமா ? மக்கள் வரிப்பணம்தானே !
அதுதான் C4 குடுத்தாச்சே அப்புறம் என்ன?
கொடுங்கள் கொடுங்கள். ஏன் இப்போது இருப்பது போதாதோ? உலகத்தின் மிக உயர்ந்த தொழில் நுட்ப கருவிகளை கொடுத்தாலும் நடப்பவை நடந்து கொண்டுதான் இருக்கும். பிரச்சனை சம்பத்தப் பட்டவர்களின் எண்ணத்தில் இருக்கிறது.
உமக்கே தெரிகிறது அவர்கள் சரியாக செயல்படவில்லை என்று.
துப்பாக்கிகளைப் பயன்படுத்தி கொலைசெய்யும் சம்பவங்கள் அதிகரித்துவருவது பற்றி எனக்கும் கவலைதான் “நம்பிக்கை”. பேசாமல் எல்லாரையும் வெடிகுண்டை பயன்படுத்த சொல்லப் போகிறீங்களா? இப்பெல்லாம் சாலை சிக்னலில் நிற்கவே பயமாக இருக்கின்றது. நின்னா போட்டுடறானுங்;க.. நிக்காம போனா வெரும் சம்மன் தானே..
நன்றாக சொன்னீர்கள், நேத்ரா !
நீங்க குடுக்காதிங்க? வழக்கம்போல அவங்களே மக்களுகிட்ட இருந்து எதை வாங்குனமோ அதை வாங்கிக்குவாங்க!