உங்கள் கருத்து ‘எந்த அடிப்படையில் பெரிமெக்கர் நிறுவனம் திட்ட நிர்வாகியாக அமர்த்தப்பட்டது? அது நீர்மூழ்கிக் கப்பல் கட்டியதுண்டா அல்லது நீர்மூழ்கிக் கொள்முதலில் ஈடுபட்ட அனுபவம்தான் அதற்கு உண்டா?’
ஸ்கோர்பின் தரகர்: நீர்மூழ்கி பேரத்தில் அல்டான்துயாவுக்கு தொடர்பில்லை
நியாயவான்: அல்டான்துயாவுக்கு எந்தத் தொடர்புமில்லை என்றால் (அப்போது) துணைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மெய்க்காப்பாளர்களைக் கொண்டு அவரைக் கொன்று அவரது உடலை வெடிவைத்து சிதறடித்தது ஏன்? பூமியிலிருந்தே “துடைத்தொழிக்கும்” அளவுக்கு அவர் அவ்வளவு பயங்கரமானவரா?
சி4 வெடிகள் பயன்படுத்தப்பட்டது ஏன்? அவரது குடிநுழைவு ஆவணங்கள் அழிக்கப்பட்டது ஏன்? அவருக்கு அதில் தொடர்பில்லை என்றால் ‘கமிஷனில்’ தம் பங்காக யுஎஸ்$500,000 கோருவதற்காக அவர் மலேசியா வரவேண்டிய அவசியம் என்ன?
அடடா!!: எந்த அடிப்படையில் பெரிமெக்கர் நிறுவனம் திட்ட நிர்வாகியாக அமர்த்தப்பட்டது? அது நீர்மூழ்கிக் கப்பல் கட்டியதுண்டா அல்லது நீர்மூழ்கிக் கொள்முதலில் ஈடுபட்ட அனுபவம்தான் அதற்கு உண்டா?
கொள்முதல் ஒப்பந்தத்தைக் கொஞ்சம் காண்பியுங்கள். “சேவைக்காக” ரிம 0.5 பில்லியன் கொடுக்கப்பட்டது நியாயமா என்பதைப் பார்க்கிறோம்
பெயரிலி _3e79: ஜஸ்பிர் சிங் யார்? அவர் எப்படி ஸ்கோர்பின் நீர்மூழ்கி பேரத்துக்குள் வந்தார்?
சேவைகளுக்காக ரிம400 மில்லியன் சொச்சம் கொடுக்கப்படும் அளவுக்கு பெரிமெக்கர் செய்த உருப்படியான வேலைகள்தான் என்ன?
பெயரிலி _3e86: நீருக்குள்ளிருந்து வெளிப்படும் நீர்மூழ்கிபோல் ஜஸ்பிர் சிங் திடீரென்று தலை காட்டியுள்ளார். இத்தனை ஆண்டுகளாக எங்கிருந்தார்? இந்த விசயங்களை எல்லாம் சொல்ல ஏன் முன்பே வரவில்லை?
லிமாவ்: நீர்மூழ்கி வாங்குவது உள்பட அது தொடர்பான பல நடவடிக்கைகள் வெளியார் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அது ஏன்?
ஆயுதப் படைகளின் நிர்வாகப் பிரிவு இருக்குமே, அது என்னவாயிற்று? ஏன் பிரான்சிடமிருந்து நேரடியாக வாங்கக் கூடாது?
மலேசியன் 001: இந்தக் கதையை ஐந்து வயது சிறுவனிடம் சொல்லுங்களேன். “எங்கே, இன்னொரு ‘ஜோக்’ சொல்லுங்க” என்பான்.
நீர்மூழ்கிக்குத் தேவையானதைச் செய்வதிலும் பயிற்சி அளிப்பதிலும் பெரிமெக்கரின் அப்துல் ரசாக் பாகிண்டாவுக்கு என்ன நிபுணத்துவம் இருக்கிறது?
நீங்கள் கேக்கும் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கப் போவதில்லை. இங்கு சிறையில் கொல்லப்படும் நமது இளைஞர்களுக்கே பதில் கிடைக்கவில்லை. அப்புறம் எங்கே அல்தான் துன்யா?