எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு அயல் நாட்டுக் கணக்குகளில் மில்லியன் கணக்கான ரிங்கிட் இருப்பதாகக் கூறிக் கொள்ளும் கடிதங்கள் அவரது சொந்தத் தொகுதியான பெர்மாத்தாங் பாவ்-வில் பரவலாக விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
எட்டு பக்கங்களைக் கொண்ட அந்தக் கடிதத்தில் அன்வாருக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளின் எண்களும் இடம் பெற்றுள்ளதாக உத்துசான் மலேசியா இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தக் கடிதத்தின் ஆயிரக்கணக்கான பிரதிகள் பெர்மாத்தாங் பாவ்-வில்
கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அது கூறிக் கொண்டது.
‘Bankleaks Anwar/Karpal’ என்னும் தலைப்பைக் கொண்ட அந்த மர்ம கடிதம் அன்வாருக்கும் டிஏபி தலைவர் கர்பால் சிங்-கிற்கும் இடையிலான வர்த்தக பேரத்தை குறிப்பதாக கூறிக் கொண்டது.
அந்தக் கடிதம் சம்பந்தமாக தமக்கு கிட்டத்தட்ட 6,000 பேரிடமிருந்து தகவல் கிடைத்துள்ளதாக பெர்மாத்தாங் பாவ் தொகுதிக்கான முன்னாள் பிஎன் வேட்பாளர் மஸ்லான் இஸ்மாயில் சொன்னார் என்றும் உத்துசான் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்வாரும் கர்பாலும் அந்தக் கடிதம் குறித்த விவரங்களைத் தர வேண்டும் என்றும் மஸ்லான் கேட்டுக் கொண்டார்.
இந்திய அரசியல் வாதிகள் விடவா இவர் நிறைய சேர்த்திருப்பார்? அவர்கள் கணக்குகளே வெளியே தெரியாத போது வராத போது அன்வார் கணக்கு மட்டும் எப்படி வெளியே வருகிறதோ. கடவுளுக்கே வெளிச்சம் .
இது போன்ற அசப்பல் உசுப்பல் கடிதங்கள் முதல் தர உலக வங்கி காஷ் டெபொசிட் செர்டிபிகட்ஸ் எத்தனை வேண்டும்? யார் பேரில் வேண்டும்? பாரிசான் விரக்திகளுக்கு பொழுது போவுது சார். சபாஸ் சபாஸ் $$$$$$$$$ நல்ல ஜோக்கு.
மாண்புமிகு அன்வர் தன் பதவிகாலத்தில் பணம் சுருற்றியிருந்தால் மகாதீரன் அவரை சும்மா விட்டுவைதிருப்பானா? மச்லான் தன் சொத்துக்களை மக்களுக்கு அறிவிப்பான?
மகாதீரின் மகன் பெட்ரோல் குத்தகையை எப்படிப் பெற்றான்..?? அதைப்பற்றி உத்துசான் எழுதுமா???