மலேசியாவும் அம்னோவும் டாக்டர் மகாதீர் இசைக்கும் ‘பல்லவிக்குத் தாளம்’ போடுகின்றன

pak lah‘மகாதீர் மலேசியாவின் புல்லாங்குழல் கலைஞர். அவரது பல்லவிக்கு தாளம்  போடுவதை நாம் நிறுத்தா விட்டால் அவர் அம்னோவையும் நாட்டையும்  புதைகுழிக்கு கொண்டு செல்வார்.’

‘டாக்டர் மகாதீர் தலைக்கனம் பிடித்த முழுக்க முழுக்க முரண்பாடுகளைக்  கொண்டவர்’

ஆறாம் அறிவு: வாழ்த்துக்கள் ! முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஏன்  தம்மைத் தற்காத்துக் கொள்ளவில்லை என நான் எண்ணுவது உண்டு. இந்தப்  புத்தகம் விற்பனையில் முதலிடம் பிடிக்கப் போகிறது. அப்போது முன்னாள்  பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எந்த அளவுக்கு செல்வாக்கு உடையவர் என்பது தெரிந்து விடும்.

உண்மையில் அப்துல்லாவின் வீழ்ச்சிக்கு மகாதீர்தான் காரணம். நாட்டின்  சரிவுக்கும் மகாதீரே காரணம். தமக்கு எல்லாம் தெரியும் தாமே சிறந்தவர் என்ற  எண்ணம் மகாதீருக்கு உண்டு என்பது வெள்ளிடைமலை.

மலேசியன்: கடைசியாக நீங்கள் அதனைச் செய்து விட்டீர்கள். உங்களை நான்  போற்றுகிறேன். மகாதீர் என்ற பிசாசை நீண்ட காலத்துக்கு முன்பே தாக்கியிருக்க  வேண்டும்.

நீங்கள் உங்கள் அதிகாரத்தைக் காட்டியிருந்தால் மகத்தான பிரதமராக
விளங்கியிருக்க முடியும். என்றாலும் நடப்புப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்  நிர்வாகத்தில் தலையிடாத உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

நீங்கள் நாட்டை வழி நடத்திய போது அந்த முதிய பிசாசு அதிகம் பேசியது,  சத்தம் போட்டது.

ஜேம்ஸ்1067: மகாதீர் மலேசியாவின் புல்லாங்குழல் கலைஞர். அவரது பல்லவிக்கு  தாளம் போடுவதை நாம் நிறுத்தா விட்டால் அவர் அம்னோவையும் நாட்டையும்  புதைகுழிக்கு கொண்டு செல்வார். தமது சொந்த நன்மைக்கும் தமது குடும்ப  நன்மைக்கும் பல்லவி போட்டுக் கொண்டிருக்கிறார். மலேசியர்கள் அந்தப்  பிடியிலிருந்து விலக வேண்டும். இல்லை என்றால் அவர், அவரது குடும்பம், சேவகர்கள் தவிர எல்லா இன மக்களும் பாதிக்கப்படுவர்.

நாற்காலி பத்திரிக்கை: அப்துல்லாவின் மருமகன் கைரி ஜமாலுதின் அபு பாக்காரின்  அரசியல் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு சரியான நேரத்தில் அந்தப் புத்தகம்  வெளியீடு காண்கின்றது அதே போன்று மகாதீருடைய புதல்வரும் அரசியல் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

அம்னோ தேர்தல் நெருங்கும் வேளையில் அந்தப் புத்தகம் வெளியாவது குறிப்பிடத்தக்கதாகும்.

குரோனோஸ்: அம்னோ தேர்தல் நெருங்கி விட்ட வேளையில் ஏன் அந்தப்  புத்தகம் வெளியாகின்றது ? கைரி உதவித் தலைவராக உயர்த்துவதற்கு  நடத்தப்படும் இன்னொரு நாடகம் இதுவா ?

லிம் சொங் லியோங்: அந்தப் புத்தகத்தின் தலைப்பு ‘விழிப்பு’ என்பதாகும். அது  மிகவும் பொருத்தமான பெயர். அவரிடம் அதிகாரம் இருந்த போது அவர் அந்த  முதியவருடைய வாயை மூடவில்லை. அவர் இப்போது ஆழ்ந்த உறக்கத்திலிருந்து  விழித்துக் கொண்டு முணுமுணுக்கிறார். அதனால் எந்தப் பயனும் இல்லை.

அடையாளம் இல்லாதவன்_4144: மகாதீர் தலைக்கனம் பிடித்தவர் ? அதைச்  சொல்வதற்கு ஒரு புத்தகம் தேவையா ? வேறு ஏதும் புதிதாக உள்ளதா ?

தலை வேட்டைக்காரன்: அப்துல்லா நமக்குத் தெரிந்ததை உறுதி செய்கின்றார்.  தம்மைக் காட்டிலும் கெட்டிக்காரர்கள் இருப்பதை மகாதீர் எப்போதும் ஒப்புக்  கொண்டதில்லை. அப்துல்லாவின் புத்தகம் அவருக்கு நிச்சயம் தலையிடியாக  இருக்கும்.

ஜேபி மனிதன்: மகாதீருடைய கோரிக்கைகளை சமாளிக்கும் ஆற்றல் நடப்புப்  பிரதமருக்கு இல்லை. எல்லா முக்கிய விஷயங்களிலும் அவர் அமைதி காக்கிறார்.  நஜிப் மீது ஏதோ ஒரு பிடியை மகாதீர் வைத்திருக்க வேண்டும். எது எப்படி  இருந்தாலும் குழப்பத்திலிருந்து மலேசியா விடுபட வேண்டுமானால் மகாதீரை  அவர் கட்டுப்படுத்த வேண்டும். அந்தத் துணிச்சல் அவருக்கு வருமா ?

 

 

TAGS: