பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் தாம் எழுத்துப்பூர்வமாகவும் வாய்மொழியாகவும் சமர்பிக்கும் கேள்விகளுக்கு பிஎன் வழி நடத்தும் பேராக் மாநில அரசாங்கம் தொடர்ந்து நிராகரித்து வருவதாக அந்த மாநில டிஏபி தலைவர் இங்கா கூ காம் குறை கூறியுள்ளார்.
எழுத்துப்பூர்வமான பதிலுக்கு ஆறு கேள்விகளையும் வாய்மொழியான பதிலுக்கு மூன்று கேள்விகளையும் தாம் சமர்பித்ததாக இங்கா சொன்னார். ஆனால் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான பதில் ‘சாதாரண மேற்கோள் புத்தகத்தில்’ கிடைக்கும் என அதற்குக் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.
“அந்தக் கேள்விகளுக்கு பதில்களைக் கொண்ட மேற்கோள் புத்தகத்துக்கு 10,000 ரிங்கிட் வரையில் கொடுக்க முன்வந்துள்ளேன். ஆனால் இதுவரையில் யாரும் அத்தகைய புத்தகத்தை கொடுக்கவில்லை,” என சித்தியவான் சட்டமன்ற உறுப்பினருமான இங்கே தெரிவித்தார்.
அந்தக் கேள்விகள் அனைத்துக் பேராவில் அரசாங்க நிலப் பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்டதாகும்.
“பில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள பத்தாயிரக்கணக்கான ஏக்கர் அரசாங்க நிலம் சம்பந்தப்பட்டுள்ளதால் அந்தக் கேள்விகளுக்கான பதில்களை அறிய பொது மக்கள் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
எல்லாம் அம்னோ அரசாங்கம் திருடி தின்று விட்டது