நேற்று ஒரு அடுக்குமாடி வீட்டில் ஒரு குண்டர் கும்பலின் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் வழக்கமான நடைமுறைகள்தான் பின்பற்றப்பட்டன என பினாங்கு போலீசார் உறுதியாகக் கூறுகின்றனர்.
இதனை வலியுறுத்திய பினாங்கு போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாபி, “எங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் சந்தேக நபர்களை நோக்கி 30 தடவை சுட்டதாகக் கூறுவது உண்மையல்ல. அந்த அடுக்குமாடி வீட்டுக்குள் நுழைவதற்குமுன் எங்களை அடையாளப்படுத்திக் கொண்டோம். அவர்கள்தான் எங்களை நோக்கிச் சுட்டார்கள்.
“நாங்கள் வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி சில தடவை சுட்டோம். அவர்களின் குடும்பத்தார் கூறுவதுபோல் நடந்துகொள்ளவில்லை”, என்றாரவர்.
காட்டியதோ 3 துப்பாக்கிகள் ,சுட்டு கொலையோ 5 பேர் .ஒருவர் ஒரு துப்பாக்கியை வைத்து போலீசாரை நோக்கி சுட்டு இருந்தாலும் .மரண எண்ணிக்கை மூன்றாக இருந்திருக்க வேண்டும் .ஆனால் உயிர் பலியோ 5 .இதில் யாரோ இருவர் அப்பாவியாக இருந்திருக்க வேண்டும் .தடுப்பு சட்டம் வேண்டும் என்று சொல்லி பார்த்தார்கள் .இதையும் அரசியல் ஆக்கினால் ,இதற்கு அதிகாரம் பதில் சொல்லும் என்பதுதான் ஒரு எடுத்துகாட்டு .அல்லது எச்சரிகையாக கூட இருக்கலாம் .
தனிஒரு மனிதனின் பதவிக்காக, ஒரு சமுதாயம் சிறுக சிறுக அளிக்க படுவதை அவர் கண்டுகொல்வில்லை. அவனுக்கு தெய்வத்தின் பெயர். யார் அவன்?……………………. கோடிட்ட இடத்தை நிரப்பு.
நாட்டில் குண்டர் கும்பல்களும்,வன்முறைகளும் தலைவிருத்தாடுகின்றது,வீட்டுக்கு வெளியே மட்டுமல்ல,வீட்டினுல் இருப்பதுகூட பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகிவிட்டது.வளர்ந்து வரும் நமது நாட்டுக்கு இது ஆரோக்கியமானதல்ல.
நல்ல செழிப்பான தோட்டத்தில் முட்கள் அதன் செழிப்பை களைக்கும் என்றால் களைஎடுத்துதான் ஆக வேண்டும் அதுபோல் சமுதாயத்திற்கு மிரட்டலாக உள்ள இந்த குண்டர்களை அழித்துதான் ஆகவேண்டும் இல்லையேல் நாட்டை அதலபாதாலத்தில் தள்ளி விடும்.
எவ்வளவோ நாட்கள் இந்த குண்டர்களை பின்தொடர்ந்த போலீசார் ஏன் அவர்களை கைதி செய்யவில்லை???
சுட்டு கொன்ற மறுநாளே இக்குண்டர்கள் ஏற்கனவே 10 ஆயுதமேந்திய கொள்ளைகளில் ஈடுபட்டிருந்தனர் என்று குருட்டுத்தனமாய் அறிக்கை விடுவது முட்டாள்தனம்.
இவர்கள் உண்மையில் ஆபத்தான குண்டர்கள் என்று நிரூபிக்க முடியுமானால் இத்தனை கேள்விகளுக்கும் பதி தேவையில்லை…
தயவு தட்சணை வேண்டாம்,இந்த குண்டர்களை பிடிப்பதில் அரசுக்கு நட்டமே. இவர்களை சுட்டுக்கொள்ளவதே சிறந்தது.இந்த குண்டர் கும்பல்களால் சமுதாயம் தனது சுய கவ்ரவத்தை இழந்து விட்டது.கொஞ்ச நஞ்சம் இருப்தாவது மிஞ்சட்டும்.
https://www.facebook.com/photo.php?v=212968135528711&set=vb.191468771011981&type=2&தியேட்டர்
குண்டர் கும்பல்
இந்த நல்லவர் கூட்டம் தான் இப்போ சுட்டுத் தள்ளப்படுகிறது… தருதலைகள்..