சீன உணவு மையம்: உத்துசானின் இனவாத கருத்துக்குக் கண்டனம்

1-utusan-187x300ஜாலான் அலோரில் சுற்றுப் பயணிகளைக் கவரும் திட்டம் ஒன்றை மேற்கொள்ளும் திட்டத்தை உத்துசான் மலேசியா ஓர் இன விவகாரமாக மாற்றியுள்ளது  வருத்தமளிப்பதாக மசீச கூறியுள்ளது.

“சுதந்திரம் பெற்று 55 ஆண்டுகளுக்குமேல் ஆன பிறகும் தேசிய நலனைவிட இன விவகாரத்துக்கே மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுவதைக் காண ஏமாற்றமளிக்கிறது”, என மசீச விளம்பரப் பிரிவு தலைவர் ஹெங் சியாய் கை கூறினார்.

“உள்ளூர் உணவை விளம்பரப்படுத்துவது சுற்றுலா தொழிலின் உயர்வுக்கு உதவும். அதன்வழி நாட்டின் வருவாய் பெருகும்.  எல்லா இனங்களும் பயனடையும்.

“எனவே, அதனால் சீனர்களுக்கு மட்டுமே நன்மை என்று உத்துசான் கூறுவது தவறு”, என்றாரவர்.

ஜாலான் அலோரை ரிம12 மில்லியன் செலவில் அனைத்துலக தரம் கொண்ட சீன உணவு மையமாக மாற்றும் டிபிகேஎல்-லின் திட்டத்தை  உத்துசான் மலேசியா அதன் தலையங்கத்தில் குறைகூறி இருந்தது குறித்து அவர் கருத்துரைத்தார்.

மலாய் உணவை விளம்பரப்படுத்தாமல் சீன உணவை விளம்பரப்படுத்துவது ஏன் என்று அது கேள்வி எழுப்பி இருந்தது.