தற்போது மஇகா தலைவர் ஜி பழனிவேல் வசமுள்ள கேமிரன் ஹைலண்ட்ஸ் நாடாளுமன்றத் தொகுதிக்கான 13வது பொதுத் தேர்தல் முடிவுகளை ரத்துச் செய்யுமாறு டிஏபி சமர்பித்த மனுவை தேர்தல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
மனுதாரரான டிஏபி வேட்பாளர் எம் மனோகரன் தமது நடவடிக்கைக்கு போதுமான விவரங்களைத் தரவில்லை என்றும் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் அளவுக்கு விரிவாக இருந்ததையும் காட்டவில்லை என்றும் அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி உமி கல்தும் அப்துல் மஜிட் சொன்னார்.
அந்த வழக்கில் பிரதிவாதியான பழனிவேலுக்கு மனோகரன் 40,000 ரிங்கிட் செலவுத் தொகையாக கொடுக்க வேண்டும் என்றும் அவர் ஆணையிட்டார்.
அந்தத் தொகுதியில் மனோகரன், முகமட் பெர்ஜாசாவின் ஷுக்ரி மாஹ்முட், சுயேச்சை வேட்பாளர்களான கிஷோ குமார் கதிர்வேலு, அழகு தங்கராஜு ஆகியோர் சம்பந்தப்பட்ட ஐந்து முனைப் போட்டியில் இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சரான பழனிவேல் 462 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
அப்பா!, பழனிவேல் இன்னும் கொஞ்ச நாளைக்கு நிம்மதியாக குறட்டை விட்டு தூங்குவார் என்று நம்புவோமாக!
இனிமேல் தான் இருக்கு! பழநிவேளுவுக்கு! சிம்மசொப்பனம் சிம்மாத்திரி பழனியை பிழியாமல் விடமாட்டார்!
இந்த நீதிபதிகள் எல்லாம் அம்னோ காரன்களின் எடுபிடிகள். நாம் என்றுமே நீதியை எதிர்பார்க்க முடியாது. இது காகாதிர் ஆரம்பித்த மடையர்களின் சாம்ராஜ்யம்.