வழக்குரைஞர்கள்: பிள்ளைகளை விசாரிக்க வேண்டுமானால் போலீசார் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்

showerசட்ட அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் ஆற்றல் பிள்ளைக்கு இல்லாததால் போலீசார் பிள்ளையை விசாரிக்கும் முன்னர் பெற்றோருக்கு அல்லது பாதுகாவலருக்குத் தகவல் கொடுக்க வேண்டும் என வழக்குரைஞர்கள்  கூறுகின்றனர்.

அந்த விஷயத்தில் 2001ம் ஆண்டுக்கான குழந்தைச் சட்டம் மௌனமாக
இருந்தாலும் போலீஸ் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதிலிருந்து
ஒதுங்கியிருப்பதற்கான தேர்வை தனிநபர்களுக்கு வழங்கும் குற்ற நடைமுறைச்  சட்டத்தின் கீழ் பிள்ளை பாதுகாக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

அந்தச் சட்டத்தின் 112வது பிரிவின் கீழ் பிள்ளை வாக்குமூலம் கொடுக்க
வேண்டிய அவசியம் இருந்தால் தனது உரிமையை பிள்ளை புரிந்து கொண்டுள்ளது  என்பதில் தாங்கள் மன நிறைவு கொள்ளும் வரை பிள்ளைக்கு போலீசார் விளக்க  வேண்டியது கட்டாயமாகும்,” என வழக்குரைஞர் மன்றத் தலைவர் கிறிஸ்டபர்  லியோங் சொன்னார்.leong

“உண்மையில் பெற்றோர்கள் இருப்பது அவசியமாகும். இல்லை என்றால்  பிள்ளைகள் புரிந்து கொண்டுள்ளதை  போலீஸ் உறுதி செய்ய முடியாது.”

“இளம் பிள்ளைகள் விஷயத்தில் இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் ஒரு  கேள்வி தங்களையும் சம்பந்தப்படுத்தி விடும் என்பதை அந்தப் பிள்ளைகளை  உணர முடியாமல் போகலாம்,” என்று அவர் விளக்கினார்.

ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளி விவகாரத்தில் தங்களுக்குத் தெரியாமல்  மாணவர்களை போலீஸ் விசாரித்துள்ளதாக பெற்றோர்கள் கூறிக் கொண்டுள்ளது பற்றிக் குறிப்பிட்ட கிறிஸ்டபர், “அது அவசரமான விஷயம் இல்லை” என்பதால்  ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியர் பெற்றோர்களை அழைத்திருக்க வேண்டும் என்றார்.