எஸ்கே ஸ்ரீபிரிஸ்தானா மாணவர்களை விசாரித்தது உண்மைதான் என்பதை போலீசார் ஒப்புகொண்டுள்ளனர். ஆனால், அவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யவில்லை, பிள்ளைகளை மிரட்டவும் இல்லை.
மாணவர்களிடம், குளியலறை சிற்றுண்டி நிலையமாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரம் குறித்து “சாதாரணமாக பேசினோம் அவ்வளவுதான்” என சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் ஜுனாய்டி பூஜாங் கூறினார்.
ஹலோ ,mr .polis என்ன கதை இது ?பேசினோம் அனால் விசாரிக்கவில்லை.என்ன பேசினிங்க?பாட்டி வடை சுட்ட கதைய ?
போயும் போயும் உங்கள் வீரத்தை இந்த பச்சிளம் குழந்தையிடமா காட்ட வேண்டும் . என்ன கொடுமை சார் இது .
சிறிய குழந்தைகளை அவரின் பெற்றோர் அனுமதியின்றி, துணையின்றி விசாரிப்பது சட்டத்தில் தவறு என்று இந்த OCPD அறியாமல் போனது எப்படி? சட்டத்தை அறியாமல் எப்படி சட்டத்தை செயல்படுத்த முடியும்? ஆண்டவனுக்கே வெளிச்சம். முஹிடின், கமலநாதன் வாயை மூடிகொண்டிருப்பதன் அர்த்தம் என்ன? இவர்கள் மந்திரிகளா? அல்லது மாங்காய் தேங்காய் மந்திரிகளா?
இந்தியர்களுக்கு ஒரு நல்ல பாடம்.
தேனீ அவர்களே முஹிடினும் ,கமலும் வடிகட்டின தேங்காய்கள் சந்தேகம் வேண்டாம் .பெற்றோர் அனுமதி இல்லாமல் எப்படி குழந்தைகளை விசாரிக்கலாம் அதற்க்கு மிரட்டவில்லை ,விசாரித்தோம் என விளக்கம் வேறு! விளக்கேன்னைகள் .
சட்டபடி பெற்றோர் இல்லாமல் விசாரிப்பதே குற்றம் இதில் மிரட்டினால் என்ன மிரட்டா விட்டால் என்ன. போலிசே சட்டத்தை மதிக்க வில்லை என்றாழ்மற்றவர்களை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. மலேசியா போலே .
கேவலமாக, ஒழுகங்கெட்டு நடந்துகொண்ட போலிஸ் அதிகாரி முதலில் அப்படி ஏதும் நடக்கவில்லை என்று மறுத்துவிட்டு பிறகு கேள்வியை தான் புரிந்து கொள்ளவில்லை என்று பல்டி அடிப்பதை விட்டு வேலையை விட்டு விலகிக்கொள்ளலாம். இவர்களெல்லாம் எப்படி படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் போலிஸ் டி ராஜாவாம். அவமான சின்னங்கள்.
தமிழ் பள்ளிக்கு அனுபமல் மலாய் பள்ளிக்கு அனுபினால் இன்னும் என்ன பிரச்னை வருமே?
என்னதான் நடக்கிறது என்பதனை பிரதமர் அறிய வேண்டும். கண்டிப்பாக இளம் ஆரம்ப பள்ளி மாணவர்களிடம் போலிஸ் விசாரணை கூடாது. விசாரித்தோம் ஆனால் மிரட்ட வில்லை என்பது எல்லாம் என்ன நாடகம். இது முற்றிலும் தவறு. இதனை அனுமதிட்ட தலைமை ஆசிரியர் மற்றும் சக போலிஸ் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அராஜகம் மேலும் வளராமல் தடுக்க வேண்டும். மலை விட்டும் தூவானம் விடவில்லை. கல்வி அமைச்சர்களின் நிலை என்ன ? அவர்கள் இதற்கு உடன்பாடு உண்டா ? என்பதை விளக்க வேண்டும்… மௌனம் சாதிப்பது தவறு. இதற்கு யார் மணி கட்டுவது >?
இந்த பொறம்போக்குகள்,பணத்திற்காக எதையும் செய்யும்…………….
தமிழரின் ஒற்றுமையும் பொருளாதார உயர்வும் மட்டுமே இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் .
ITHUTHAN MALAYSIA
கொலு மண்டபத்தில் விசாரிக்க வேண்டியதை கோவில் மண்டபத்தில் விசாரித்ததாலேயே கோவலன் தலை கொய்யப்பட்டது ! அதுபோல, எதுக்கு அங்க போனீங்க ? பெற்றோகளின் அனுமதியின்றி உங்களை யார் அங்கே அனுப்பியது ? பிள்ளைகளை காண யார் அனுமதி வழங்கியது ? தலைமை ஆசிரியரும் போலீசும் சேர்த்து கூட்டு கும்மாளம் பண்ணிவிட்டு விளக்கம் சொல்லுறீங்களா ? வேட்கமாகயில்லை ??
போலீசார், பள்ளிகள் பக்கம் அனுமதியின்றி போகக்கூடாது என rules உண்டு. இந்த விஷயம் இந்த வெங்காய மந்திரிகளான முஹிடீனுக்கும் கமலனாதனுக்கும் தெரியாது என்பதால், அவர்களை மன்னித்து விடுங்கள்.
போலிஸ் சார்…. போலிஸ் சார் ……தயவு செய்து அந்த பள்ளி இந்திய மாணவர்களை அவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யுங்கள் , பிள்ளைகளை மிரட்டவும் …கொடுமை படுத்துங்கள் …..ஜெயில் புடிச்சி போடுங்கள் …அப்போதாவது இந்திய பெற்றோர்களின் கவனம் கொஞ்சம் தமிழ் பள்ளி பக்கம் திரும்பட்டும்…….
ஆசிரியர் ரிபோர்ட் பண்ண உடனே கடவுள் வாக்கு மாதிரி
களம் இறங்கிய போலிசார் அவர் மீது ரிபோர்ட் பண்ணது
என்ன ஆச்சி கமலநாத இதையும் ஒரு 10 கிலோ அரிசி
கொடுத்து கேஸ் க்ளோஸ் பண்ண யோசனையா?