ரேலா தனி துறையின் கீழ் வைக்கப்படும்

relaரேலா என அழைக்கப்படும் மக்கள் தொண்டர் படையை அதன் சொந்தத்  துறையின் கீழ் வைப்பதற்கான யோசனையை அமைச்சரவை ஏற்றுக்  கொண்டுள்ளது.

அந்தத் தகவலை உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி   வெளியிட்டார்.

அதே வேளையில் புதிய பதவிகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  சொன்னார்.

“அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ள அந்த மேம்பாடு ரேலா உறுப்பினர்களுடைய உணர்வுகளை மேலோங்கச் செய்யும்,” என அவர் புத்ரா ஜெயாவில் 200 ரேலா உறுப்பினர்களிடம் பேசிய போது சொன்னார்.

என்றாலும் அமைச்சரவையின் இன்று எடுத்த அந்த முடிவின் விவரங்களை அவர்  வெளியிடவில்லை.

 

TAGS: