பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கின் வேண்டுகோளுக்கிணங்க கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ் (ஜிஎஸ்சி), அம்மாநிலத்தில் தாண்டா புத்ரா படத்தைத் திரையிடுவதில்லை என முடிவு செய்துள்ளது.
“அதற்காக நுழைவுச் சீட்டுகளை வாங்கியவர்களுக்குப் பணம் திருப்பிக் கொடுக்கப்படும்”, என அது ஓர் அறிக்கையில் கூறியது.
பினாங்கில் கருத்து சுதந்திரம் பரி போகிறது, லிம் சர்வதிகாரி போல் நடந்து கொள்கிறார்.
மெட்ராஸ் கபே திரைபடத்தை வெளியிடக்கூடாது என்று எதற்கு போராட்டம் நடக்கிறது? அங்கே சுதந்திரம் பறிக்க படுகிறது, தமிழன் சர்வாதிகாரன் என்று அர்த்தமாகுமா ?? இலங்கை தமிழனை பற்றி படமெடுத்தால் மலேசியா காரனுக்கு என்ன வந்தது ?? நண்பா, இங்கே நாம் பார்ப்பது இலங்கையை அல்ல தமிழ் இனத்தை. ஒரு இனத்தை இழிவு படுத்தினால் அதே இனத்தவன் கை தட்டியா வரவேற்பான் ? அப்படிதான் இங்கும் நடக்கிறது. சீனர்களை மோசமானவர்கள் , தேசிய கொடிகம்பத்தில் சிறுநீர் அடிப்பது போலவும் , அங்கு வரும் மலைகாரர் மீதும் சிறுநீர் படுவது போலவும் சித்தரித்து இருகிறார்கள். இதுபோன்ற பாத்திரங்கள் சினமூட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? வரும்முன் காப்பதே நன்று !!
சபாஸ் gsc