“ஆற்றைத் தடுக்கும்” யோசனையை கெராக்கான் எதிர்க்கிறது

waterசுங்கை மூடா ஆறு பினாங்கிற்குள் செல்வதை தடுக்கும் யோசனைக்கு கெடா  மாநில கெராக்கான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை அம்னோவின் பாக்கார் பாட்டா சட்டமன்ற உறுப்பினர்  அகமட் பாட்ஷா முகமட் ஹனீபா, அலோர் ஸ்டாரில் தெரிவித்த அந்த யோசனையை தாம் ஒப்புக் கொள்ளவில்லை  என அந்த கெராக்கான் மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் தான் கெங் லியாங்  சொன்னார்.

“அந்த யோசனை சரியானது அல்ல. பினாங்கிற்கு ஆற்று நீர் செல்வதை நாம்  தடுக்கக் கூடாது,” என அவர் தொடர்பு கொள்ளப்பட்ட போது மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

அவ்விரு மாநிலங்களும் பிரச்னையைத் தீர்க்க முடியாவிட்டால் செப்டம்பர் மாதம்  கூடும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அதனை எழுப்பலாம் என்றும் தான்  பரிந்துரை செய்தார்.