Project IC என்ற அடையாளக் கார்டு திட்டம் பற்றியும் ஹிஷாம் எல்லாவற்றையும் சொல்வாரா ?

அண்மையில் இந்த நாட்டுக்கு வந்த பலருக்கு நீங்கள் எவ்வாறு குடியுரிமைகளை வழங்க முடியும் ? சபாவில் இருப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது ?

அந்நியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது பற்றி ஹிஷாம் எல்லா விவரங்களையும் வெளியிடுவார்

மாத்தியூ இயோ: உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் யாரை முட்டாளாக்க நினைக்கிறார் ? நான் சற்று முன்பு இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு வருகையாளர் விசா-வில் இந்த நாட்டுக்கு வந்த பாகிஸ்தானி ஒருவருடன் தேநீர் அருந்தினேன். அவரது விசா காலம் காலவதியானதும் அவர் சட்டவிரோதக் குடியேற்றக்காரராகி விட்டார்.

ஆனால் இப்போது அவர் தமக்குப் புதிதாக கிடைத்த சிவப்பு நிற அடையாளக் கார்டை காண்பித்துக் கொண்டிருக்கிறார். புத்ராஜெயாவில் உள்ள ஒருவரின் உதவியுடன் வெகு விரைவில் அதனை நீல நிறத்துக்கு மாற்றிக் கொள்ளப் போவதாக அவர் தம்பட்டம் அடைத்துக் கொள்கிறார். தமது தாய் நாட்டில் இருப்பதை விட இங்கு தாம் மிகவும் சௌகரியமாக இருப்பதாகவும் அவர் சொல்கிறார்.

இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் அவர் தமக்கு உடனடியாக பிஆர் என்ற நிரந்தர வசிப்பிடத் தகுதியையும் தேசிய அடையாளத் தன்மையையும் வழங்கும் அரசாங்கத்தைப் பற்றியும் பெரும்பான்மை இனத்தைப் பற்றியும் கேலி செய்வதாகும். அத்துடன் நீல நிற அடையாளக் கார்டை வைத்திருக்கின்றவர் என்னும் முறையில் தமது புதல்வர் என்றாவது ஒரு நாள் இந்த நாட்டின் பிரதமராகக் கூடும் என்றும் அவர் பிரகடனம் செய்து கொண்டார்.

பாஜ்னிக் சிங்: ஹிஷாம் அவர்களே எல்லாவற்றையும் சொல்லுங்கள். அது சபாவிலிருந்து தொடங்க வேண்டும்.

பார்வையாளன்: அந்த அம்னோ மோசடிக்காரர்களுடைய நடத்தையை எளிதாக ஆரூடம் கூற முடியும். கிரிமினல் குற்றங்கள் ஏதும் செய்திருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களுடைய அடிவருடிகள் அந்த கிரிமினல் நடவடிக்கையை விளக்குவதற்கு அப்பட்டமான பொய் ஒன்றை அவிழ்த்து விடுவார்கள்.  

எதிர்க்கட்சிகளும் பொது மக்களும் கடுமையான விமர்சனம் செய்தால் அந்த அம்னோ மோசடிக்காரர்கள் மக்களை முட்டாளாக்குவதற்கு ஜோடிக்கப்பட்ட கதை ஒன்றை உருவாக்குவர். 24 மில்லியன் ரிங்கிட் பெறும் மோதிரத்தை ரோஸ்மா மான்சோர் பெற்றதாகக் கூறப்படும் விஷயத்தில் அவர்களுடைய பாணியைத் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது.

அந்த மோதிரம் ரோஸ்மாவுக்குச் சொந்தமானது அல்ல என விளக்குவதற்கு அம்னோ அடிவருடிகள் அரும்பாடுபட்டனர். அந்த விளக்கங்களை யாரும் நம்பவில்லை என்பதை நஜிப்பும் அவரது கூட்டாளிகளும் உணர்ந்த போது அந்த மோதிரம் திருப்பி அனுப்பப்பட்டு விட்டது என்ற இன்னும் நம்பமுடியாத கதையை அவர்கள் அவிழ்த்து விட்டனர்.

இப்போது பாஸ் கட்சி, ஒய்வுத் தலம் ஒன்றில் பெரும்பாலும் உடனடி குடியுரிமை கொடுக்கப்படுவதற்காக பல அந்நியர்கள் இருந்ததை அம்பலப்படுத்தியுள்ளது. அந்த அந்நியர்கள் தொழில் முனைவர் பயிற்சி ஒன்றில் கலந்து கொள்ள அங்கு சென்றிருந்ததாக ஒர் அடிவருடி நம்பவே முடியாத விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

ஆகவே நம்பக்கூடிய கதையை ஜோடிப்பதற்கு ஹிசாமுடினுக்கு சற்றுக் கூடுதலான கால அவகாசம் தேவைப்படும்.

உங்கள் அடிச்சுவட்டில்: அமைச்சருடைய வாதம் உண்மையில் எனக்கு வியப்பைத் தருகிறது. நீங்கள் எதிர்க்கட்சி ஆதரவாளர்களுக்கும் குடியுரிமையை வழங்கியுள்ளீர்களா இல்லையா என்பது இங்கு பிரச்னை அல்ல. ஹிஷாமுடின் உங்களைக் குற்ற உணர்வு வாட்டுகிறதா ? அதனால் நியாயமற்ற உங்கள் நடவடிக்கைக்கு நியாயம் கற்பிக்க முயலுகின்றீர்களா ?

நமது கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு நீங்கள் குடியுரிமையை வழங்கினீர்களா என்பதே இங்குள்ள பிரச்னை. குறிப்பிட்ட சமயத்தையும் இனத்தையும் நீங்கள் திட்டமிட்டு ஒதுக்கினீர்களா ? முஸ்லிம்களாக உள்ளவர்களுக்கு நீங்கள் திட்டமிட்டு சலுகைகளை கொடுத்தீர்களா ?

நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்ட பலருக்கு (பெரும்பாலும் சீனர்கள், இந்தியர்கள்) இறக்கும் தறுவாயில் இருக்கும் போது தான் குடியுரிமை வழங்கப்பட்டதை நான் நாளேடுகளில் படித்துள்ளேன். உண்மையில் பலர் குடியுரிமை கிடைக்காமலேயே கல்லறைக்கு போயுள்ளனர்.

இந்த நாட்டுக்குள் அண்மையில் வந்தவர்களுக்கு குடியுரிமையை (அதுவும் பூமிபுத்ரா தகுதியுடன்) நீங்கள் எப்படி வழங்க முடியும் ? அவர்களுக்கு என்ன தொழில் நிபுணத்துவத் தகுதி உள்ளது ? அவர்கள் இந்த நாட்டுக்குள் எவ்வளவு மூலதனத்தை கொண்டு வந்தார்கள் ?

பூ: சபாவில் மேற்கொள்ளப்பட்ட எம் திட்டம் பற்றியும் ஹிஷாமுடின் எல்லாவற்றையும் சொல்வாரா ?