பினாங்கு பிஎன் தலைமைத்துவத்துக்கு அம்னோ கோரிக்கை விடுக்காது

பிஎன் ஒற்றுமைக்காக பினாங்கில் பின்னிருக்கையில் அமருவதற்கு அம்னோ தயாராக இருக்கிறது.

அத்துடன் அந்த வட மாநிலத்தில் கெரக்கானுடைய நிலையை வலுப்படுத்துவதற்காக மற்ற பிஎன் உறுப்புக் கட்சிகளுடன் இணைந்து செயல்படவும் அம்னோ விரும்புகிறது.

இவ்வாறு பிஎன் தலைவரும் அம்னோ தலைவருமான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று கூறியுள்ளார்.

நஜிப்  இன்று கோலாலம்பூரில் கெரக்கான் ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி  வைத்து உரையாற்றினார்.

“பினாங்கில் மாநிலத் தலைமைத்துவம் மீது அம்னோ கோரிக்கை விடுக்காது எனச் சொல்வதற்கு நான் ஆயத்தமாக இருக்கிறேன்,” என அவர் தமது தொடக்க உரையில் குறிப்பிட்டார்.

ஆனால் அது நிகழ்வதற்கு கெரக்கான் “சவால்களைச் சமாளிக்கும்” ஆற்றலைப் பெற்று மீண்டும் எழ வேண்டும். தேசியத் தலைமைத்துவத்துக்குள் வலுவான  சக்தியாகவும் அது உருவாக வேண்டும். அதே வேளையில் பினாங்கு மக்களுக்கு சாத்தியமான மாற்று அரசாங்கத்தையும் ஆட்சிமன்றத்தையும் கெரக்கான் வழங்க வேண்டும் என அவர் மேலும் சொன்னார்.