கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிள்ளான் வடக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் எஸ். விஜய ராவ் கூறுகையில், பிரேதப் பரிசோதனையில் குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
நேற்று கிள்ளான், காப்பாரில் உள்ள பள்ளி ஒன்றில், காலைக் கூட்டத்தின் (Assembly) போது மயங்கி விழுந்த 6-ஆம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
கிள்ளான் வடக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் எஸ். விஜய ராவ் கூறுகையில், அந்த 12 வயது சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு (HTAR) கொண்டு செல்லப்பட்ட பிறகு, அங்கு அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
“பாதிக்கப்பட்ட மாணவர் காலை 8.30 மணியளவில் பள்ளிக் கூட்டத்தின் போது மயக்கமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது, அதன் பிறகு மேலதிக சிகிச்சைக்காக அவர் HTAR மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், பின்னர் அவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது,” என்று அவர் கூறினார்.
பிரேதப் பரிசோதனையில் குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், ஆய்வக விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
























