ஜொகூர் தேர்தல்
அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மல் சாலே, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் ஜொகூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது தலைகவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை தானே செலுத்துவதாக தெரிவித்தார்.
அதே நேரத்தில், உயிரிழப்புகளை ஏற்படுத்தும் மதுபோதையில் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்துமாறு லோக்கிற்கு அக்மல் சவால் விடுத்தார்.
தலைகவசம் அணியாத விவகாரத்தில் எவ்வளவு விரைவாக அமைச்சர் நடவடிக்கை எடுத்தாரோ, அதே வேகத்தில் இந்த விவகாரத்திலும் (மதுபோதையில் வாகனம் ஓட்டி ஏற்படும் விபத்துகள் தொடர்பாக) அவர் விரைவாக நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.
“அனைத்து பெல்டா (FELDA) கிராமவாசிகளுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் கூறுவது என்னவென்றால், இனிமேல் சுராவுக்கு (முஸ்லிம் தொழுகை இடம்) செல்லும் தூரம் அருகிலிருந்தாலும், ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள். இல்லையெனில் அமைச்சர் உங்களுக்கு அபராதம் விதிப்பார்,” என்று அவர் இன்று வெளியிட்ட முகநூல் அறிக்கையில் தெரிவித்தார்.

























