மசீச: செயல்திட்டத்தை விளக்கும் பொறுப்பு இட்ரிசுக்கு உண்டு

1-idris1aகல்வி  செயல்திட்டம் பிடிக்காத  பெற்றோர்  அவர்களின்  பிள்ளைகளை  வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைக்கலாம் என்று  கருத்துரைத்த  கல்வி அமைச்சர்,II,  இட்ரிஸ் ஜூஸோவைச் சாடுவோர் வரிசையில் மசீச-வும் சேர்ந்து கொண்டிருக்கிறது.

செயல்திட்டம்மீது  நிபுணர்களும், அரசுசாரா அமைப்புகளும் பொதுமக்களும் 55,000-க்கு மேற்பட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர் என மசீச இளைஞர் கல்விப் பிரிவு  தலைவர்  சொங் சின் வூன் தெரிவித்தார்.

எனவே,  திட்டத்தைச் செயலாக்கும் முன்னர் அது நடைமுறைக்கு ஒத்துவரக்கூடியதுதான் என்பதை மக்களுக்கு எடுத்துச்சொல்லி  அவர்களை நம்ப வைக்க அரசாங்கம் முயன்றிருக்க வேண்டும்.

“ஆனால், இட்ரிஸ்,  கொள்கை-வகுப்பில் மக்களின் பங்கேற்பைப் புறக்கணிப்பதும் ஆத்திரப்பட வைக்கும் வகையில் கருத்துரைப்பதும் வருந்தத்தக்கது”, என்றாரவர்.