பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் தாழ்ந்து போனது ஏன் என ஆராய வேண்டும்- துணைப் பிரதமர்

1 dpmகல்வி அமைச்சு பல்கலைக்கழகங்களின் தரவரிசையை எப்போதும் கண்காணித்து வருவதுடன் அவை உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கு இணையாக விளங்க தேவையான உதவிகளை வழங்கவும் தயாராகவுள்ளது.

இவ்வாறு தெரிவித்த துணைப் பிரதமர் முகைதின் யாசின், பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் ஏற்றஇறக்கம் நிகழ்வது இயல்பான ஒன்றுதான் என்றார்.

“அது ஒன்றும் புதிதல்ல. அண்மையில் அறிவிக்கப்பட்ட மலேசிய கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் (பிபிபிஎம்) இலக்குகளில் பல்கலைக்கழகங்களின் தரவரிசையை உயர்த்துவதும் ஒன்றாகும்”, என பிரிட்டனில் மலேசிய செய்தியாளர்களிடம் முகைதின் கூறினார்.

பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் இறக்கம் கண்டதற்கான காரணத்தைக் கண்டறிந்து கூறினால் அரசாங்கத்தால் அவற்றுக்கு உதவ முடியும் என்றாரவர்.