காருக்கு அளவுகடந்த வரி செலுத்த வேண்டியிருப்பதால் பிஎன் அரசாங்கம் பெட்ரோலின் விலையை உயர்த்துவதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று பிகேஆர் எம்பி, ரபிஸி ரம்லி கூறினார்.
“வரிவிதிப்பின் காரணமாக மலேசியர்கள் மற்ற நாடுகளைவிட ஒரு மடங்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டியுள்ளது”, என பிகேஆர் வியூக இயக்குனருமான ரபிஸி ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
உதவித் தொகையைக் குறைத்து பெட்ரோலின் விலை உயர்த்த விரும்பும் அரசாங்கம் அதேபோல், வரிகளைக் குறைத்து காரின் விலைகளையும் குறைக்க வேண்டும் என்றாரவர்.