அரசாங்கம் ஆங்கிலம் கற்பிக்க இந்தியாவிலிலிருந்து ஆசிரியர்களைத் தருவித்தால், உள்ளூர் ஆங்கில ஆசிரியர்களின் நிலை என்ன ஆகும் என பாஸ் கேள்வி எழுப்புகிறது.
அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட தேசிய கல்வி செயல்திட்டத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்பதை பாஸ் தகவல் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் சுட்டிக்காட்டினார்.
“இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் தருவிக்கப்படுவார்கள் என்பது உண்மை அல்ல என்றால், தரமான ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறையைப் போக்க கல்வி அமைச்சு ஒரு திட்டத்தை அறிவிக்க வேண்டும்”, என்றாரவர்.
இந்த பட திட்டதின் மூலம் தமிழ் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆப்பு வைக்க தானே இட்திட்டம்.
இந்தியாவிலிருந்து ஆங்கில ஆசிரியர்கள் தேவை இல்லை. உள்ளூரிலுள்ள இந்திய, சீன ஆசிரியர்களே போதும். இப்போது உள்ள பிரச்சனை எல்லாம் மலாய் மொழியில் ஆங்கிலம் படித்துக் கொடுக்கும் மலாய் ஆசிரியர்கள் தான்.இவர்களுக்கு ஆங்கிலம் படித்துக் கொடுக்கத் தகுதி இல்லை என்று தெரிந்தும் அவர்களை வற்புறுத்தும் தலைமை ஆசிரியர்கள் தான் பிரச்னைக்கு உரியவர்கள்.
இந்தியாவிலிருந்து ஆங்கிலம் கற்ப்பிக்க ஆசிரியர்களை வரவளைப்பதர்க்கு பதில் கல்வி அமைச்சிக்கு தகுதி வாய்ந்த கல்வி மான்களை கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் கல்வியின் தரமும் மேம்பாடு அடையும்?
ஆங்கிலம் படித்த கல்விமான்களை பள்ளியில் சேர்த்தல் நம் நாட்டில்
ஆங்கில கல்வி மேன்மைஅடையும். பிற நாடுகளில் இருந்து ஆசிரியர்கள் வரவழைக்க தேவையில்லை. கல்வி அமைச்சு நடவடிக்கையில் இறங்குமா?
நம் நாட்டில் அரசு ஊழியர்கள் என்றால், அது மலாய்க்காரர்கள் என்றாகிவிட்டது. ஆசிரியர்கள் நிலையும் அப்படித்தான். ஆனால் மலாய்க்காரர்களுக்கு ஆங்கிலம் என்றால் வேப்பங்காய். அவ்வளவு எளிதில் அவர்கள் நாவில் இம்மொழி நுழைந்துவிடாது. உலகிலேயே பின்தங்கிய நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று. அதன் காரணமே அவர்களிடம் ஆங்கில புலமை இல்லாததுதான். [இந்தோனேசியாவிலிருந்து வந்த வந்தேறிகளே இந்த மலாய்க்காரர்கள்.] இப்பிரச்சினையை தீர்ப்பது வெகு சுலபம். நம் நாட்டின் சீன, தமிழ்ப் பிரஜைகளை லண்டன் அல்லது இந்தியா சென்று பயிற்சிகளைப் பெற்று வர நமது அரசு ஊக்குவிக்கவேண்டும். ஆனால் செய்யாது. காராணம். இனம்.
ஆங்கிலதில் பட்டம் பெற்ற நிறைய பேர் இருக்கின்றனர் வெளி நாட்டவர் தேவை இல்லை கல்வி அமைச்சு இதில் இன பேதம்
பார்க்காமல் செயல்ப்பட வேண்டும் .
வினை விதைத்தால் வினையைத்தான் அறுக்கவேண்டும் .80ஆம் ஆண்டுகளுக்கு பிறகு மகாதிர் கட்டளைப்படி நிறைய இந்தியர்களுக்கு தகுதி இருந்தும் ஆங்கில ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு வாய்ப்பு கொடுக்க வில்லை.இது என் அனுபவத்தில் கண்ட உண்மை.இதனால் ஆங்கில ஆசிரியர்க்கு விண்ணப்பித்தவர்களுக்கு தமிழ் துறை கொடுக்கப்பட்டது.தமிழ் துறைக்கு ஆர்வம் உள்ளவர்கள் நிலை இந்த கொடுங்கோல் மகாதிர் ஆல் பாதிக்கப்பட்டது.நிறைய ஆங்கில மலாய் ஆசிரியர்கள் உருவாக்க நினைத்த நீ அவர்களுக்கு ஆர்வம் ,ஆற்றல் ,திறமை உள்ளதா என்று யோசித்து இருக்க வேண்டும்.பாவம் இந்த ஆங்கில பயிற்சி பெற்ற மலாய் ஆசிரியர்கள் இன்னும் மலாய் தான் போதிக்கிறார்கள்.என்ன கொடுமை ஐயா இது.தலையை விட்டு வாலை பிடிக்கிற கதையா இருக்கு.உள்நாட்டு இந்தியர்களுக்கு பயிற்சி கொடுத்து நல்ல ஆங்கில ஆசிரியர்கள் உருவாக்க இந்த அரசாங்கத்திற்கு மனம் வரவில்லை ,பாருங்கள்.
உண்மையிலே இவர்களுக்கு (BN ) ஆட்சி நடத்த தெரியவில்லை.