மலேசிய விமான நிறுவனம், செப்டம்பர் 16-க்குப் பின்னர் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு தொடர்ந்து குறைந்த கட்டணங்களில் பயணங்களை வழங்குகிறது.
குறிப்பிட்ட சில உள்ளூர், அனைத்துலக பயணங்களுக்கு மட்டுமே இச் சலுகை என எம்ஏஎஸ் ஓர் அறிக்கையில் கூறியது.
“சில இடங்களுக்கான கட்டணங்களில் 55விழுக்காடுவரை கழிவு வழங்கப்படுகிறது”, என அந்நிறுவனத்தின் வட்டார உயர் உதவித் தலைவர் முஸாமில் முகம்மட் கூறினார்.
ஏர் ஏசியா[AirAsia] விமானங்களின் மலிவு கட்டணங்களுக்கு போட்டியாக மலிந்டோ[Malindo]வந்துள்ளது. இந்த இரண்டுக்கும் ஈடுகொடுக்க இயல்லாமல், வேறு வழியில்லாமல் மாஸ்[MAS] வலுக்கட்டாயமாக கட்டணத்தை குறைக்க வேண்டிய கட்டாயமாகிறது. இம்மூன்றிலும் மாஸ் கொஞ்சம் பரவாயில்லை. அமருவதற்கு இடவசதி நன்றாகவே உண்டு. தண்ணீருக்கும் உணவுக்கும் கட்டணமில்லை. மலிந்டோவும் பரவாயில்லை. ஆனால் ஏர் ஏசியாவில் நெருக்கி உட்காரவேண்டும். சிறிய தண்ணீர் பாட்டில் 4.50 காசு. மற்ற இரண்டையும் விட இந்த விமானம்[AirAsia] மிக மிக மலிவு.
ஏர்ஆசியா விமானம் மிக குறைந்த விலையில் டிக்கெட் மட்டும் வழங்குகிறது. உணவு, தண்ணீர் நாம் சொந்தமாக வாங்கிக்கொள்ளவேண்டும். நான் கூட அடுத்த வாரம் மாஸ் விமானத்தில் குறைந்த விலையில் டிக்கெட் வாங்கி சென்னை செல்கிறேன்.
air ஆசியா வில்
எல்லாமே கட்டணம் மயம் தான்
டிக்கெட் தேதி
மாற்றினலும் ரிங்கிட் 100 காட்டனும்
air asia ஒகே தான் என்ன ரோபோட் மாதிரி உட்காந்து போகணும் .
உடனடிசென்னை பயணத்திற்கு MAS RM 1400.00 (அனைத்தும் உள்ளடங்கியது ) AIR ASIA RM 1400.00 ( பயணத்திற்கு மற்றும் மற்றவைக்கு தனி தனி வசூல்).