அரசுத் துறைகளும் அரசுசார்ந்த நிறுவனங்களும் (ஜிஎல்சி), அம்னோவின் குரலாக விளங்கும் உத்துசான் மலேசியாவில் கூடுதல் விளம்பரங்களைச் செய்ய வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வலியுறுத்தியுள்ளார்.
75-ஆண்டுகளுக்குமுன் தோற்றுவிக்கப்பட்ட அந்நாளேடு தொடர்ந்து நிலைத்திருக்க அது அவசியம் என்றாரவர்.
ஜாலான் சான் செள லின், ஜாலான் எனாமில் உத்துசானின் புதிய தலைமையகக் கட்டிடம் அமைந்துள்ள சாலை ஜாலான் உத்துசான் எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.
மக்கள் பணம் அம்னோவுக்குத்தான் என்பதை தெளிவாக்கியுள்ளார் பிரதமர். ஆம்! உத்துசான், அம்னோவின் பத்திரிகை. அரசு விளம்பரங்கள் உத்துசானுக்குதான் போகவேண்டும் என்றால், கூஜா தூக்கிகலான மற்ற பத்திரிக்கைகளின் பிழைப்பு?
நம் நாட்டில் பெரும்பாலான பத்திரிக்கைகள் அரசையும் அம்னோவையும் துதிபாடுபவை. ஆனால் இந்த உத்துசான் பொய்களையே கூறி ஓட்டாண்டியாய் போன கழிவறைப் காகிதம். உத்துசானின் பொய்கள் கணக்கற்றவை. இப்பத்திரிக்கையால் பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களில் வழக்குகளை தொடுத்து, ஏறத்தாழ அனைவருமே வெற்றிபெற்றுள்ளனர். ஆகையால். பாதிக்கப்பட்டோரால் கோரப்படும் நஷ்ட ஈடுகளை சரிக்கட்ட முடியாததால், அரசாங்க கஜானாவை உத்துசானுக்கு திசை திருப்பியுள்ளார், அல்தாந்துயா நஜிப். கூடிய விரைவில் இந்த ‘ஔட்டா’ பத்திரிகை காணாமல் போகப்போகிறது என நஜிப்புக்கு தெரியும் என்பதால், இந்த சாக்கடை பேப்பரின் நினைவாக ஒரு சாலைக்கு பெயர் சூட்டுகிறார் நஜிப். போகிற போக்கைப் பார்த்தால், அல்தாந்துயா பெயரிலும் சாலை வந்தாலும் வரும். ‘சத்து மலேசியா அல்தாந்துயா’
இப்படி மானங்கெட்ட பொழப்பு நடத்துவதை, நாண்டுகிட்டு சாகலாம். இதை சொல்பவனும் ஒரு பிரதம மந்திரி? நாட்டின் ஒற்றுமைக்குப் பாடுபடுபவராம்? சொல்லுவது ம.இ.க. தலைவர்களும், குட்டித் தலைவர்களும்!
விளம்பரங்கள் மக்களுக்குப் போய் சேர வேண்டாமென்றால் இது தான் நல்ல யோசனை!
ம.இ.க தலைவர்கள் நிச்சயமாக இது ஒரு அருமையான திட்டம், இந்த திட்டத்தினால் நம் நாட்டு இந்தியர்கள் நலன் அடைவார்கள் என எழுதி கொடுத்து விடுவார்கள்.
நம்மையெல்லாம் அடகுவைத்துவிட்டான்கள். ஒருகாலத்தில் நம்மவர்கள் எல்லா துறைகளிலும் நல்ல பதவியில் இருந்தனர் ஆனால் இப்போது கதையே தலைகீழ்.நம்மையெல்லாம் இப்போது குண்டர்கள் என்ற தரத்தில் உருதிபடுத்தியிருக்கின்றான்கள்
இதுதான் உண்மையான அம்னோ மற்றும் அதன் தலைவனின் கொள்கை. உலகுக்கே தெரியும் இந்த பத்திரிக்கை அதன் செய்திகளின் வழி இந்நாட்டை பாதலத்திற்கு கொண்டு செல்லும் அதே வேலை பத்திரிக்கை அதர்மத்திற்கு எடுத்துக்காட்டாகும். இப்பதிரிக்கைக்கு திறந்த ஆதரவு தீண்டும் சமய பச்சோந்தி நஜிப். அம்னோ தேர்தலுக்காக இன்னும்பல இனவெறி கொள்கைகளை அறிமுகம் செய்யப் போகிறான், விரைவில்.
நம் அரசியல் அதிகாரிகள் பலர் மக்கள் பணத்தை ஏப்பம் விடுகிறார்கள்
[திருடர்கள்] இவர்களும் ,
குண்டர் கும்பலில் செர்துக்கொல்ல வேண்டும் .
நம் போலிஸ் சிங்கங்கள் இவர்களையும் கண்டுப்பிடித்து
போட்டுதல்லுங்கள் .
அசிங்கமான அரசியல் நடத்துவதில் பிரதமர் கெட்டிக்காரர் என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்துள்ளார்.இன்னுமொரு மிக பெரிய பூ மாலை போட்டு ஆலத்தி எடுக்க டத்தோ சிரிகளும் தான்சிரிகளும் அரசியல் மேடைகளிலும் கோயில் தளங்களிலும் தயார் செய்து விடுவார்கள்.