கம்போங் ரயில்வே விவகாரத்துக்கு நீதிமன்றத்துக்கு வெளியில் ஒரு தீர்வு காணப்பட்டுள்ள நிலையிலும் குடியிருப்பாளர்கள் செவ்வாய்க்கிழமைக்குள் இடத்தைக் காலி செய்தாக வேண்டும் என அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து வெளியேற்றப்படுவோருக்கு கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) தற்காலிக வீட்டு வசதிகளை இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதால் செவ்வாய்க்கிழமையன்று அவர்கள் வீடற்றவர்களாகத்தான் நிற்பார்கள் என பத்து எம்பி தியான் சுவா கூறினார்.
“கம்போங் ரயில்வே குடியிருப்பாளர்கள் குறைந்த, நடுத்தர வருமானம் பெறும் வகையினர். வீடுகளுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் தற்காலிக வீட்டு வசதியைத் தேடிக்கொள்ளும் வசதி அவர்களுக்குக் கிடையாது”, என்றாரவர்.
எனவே, டிபிகேஎல் தற்காலிக வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும்வரை அவர்கள் கம்போங் ரயில்வேயிலேயே தொடர்ந்து இருக்க அனுமதிக்க வேண்டும் என தியான் சுவா கேட்டுக்கொண்டார்.
கம்போங் ரயில்வே மக்களுக்கு திரு தியான் சுவா பேசுவது பாரட்டுக்குஉரியது .கவனம் உங்களையும் குண்டர் கும்பல் தலைவன்
பட்டியலில் செர்துக்கொள்ளபோகிரர்கள் .