பூமிபுத்ரா சமூகத்திற்கு புத்ராஜெயாவின் பதிய பொருளாதார திட்ட அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் வேளையில், மசீசவின் இளைஞர் பிரிவு அரசு தொடர்புள்ள நிறுவனங்கள் (ஜிஎல்சி) இன அடிப்படையிலான இலக்குகளை உருவாக்கக் கூடாது ஏனென்றால் அவற்றுக்கான நிதி அனைத்து மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கப்படுகிறது என்று பிரதமர் நஜிப்புக்கு நினைவுறுத்தியுள்ளது.
“இன்றைய உள்ளூர் ஜிஎல்சிகள் அவை இப்போது இருக்கின்ற நிலைக்கு மேம்பாடு அடைந்ததற்கான நிதி வளம் அனைத்து இன மக்களின் வரிப்பணத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது நாங்கள் அறிவோம்.
“ஆகவே, ஜிஎல்சிகலின் செயல்பாடுகளில் இன வேறுபாடு இருக்கக் கூடாது”, என்று மசீச இளஞர் பிரிவுத் தலைவர் வீ காசி யோங் இன்று வெளியிட்ட ஓரு செய்தி அறிக்கையில் கூறியுள்ளார்.
பூமிபுத்ரா சமூகத்திற்காக பல பில்லியன் ரிங்கிட் செலவிடும் இன அடிப்படையிலான கொள்கைகளை நேற்று பிரதமர் நஜிப் அறிவித்திருந்ததற்கு எதிர்வினையாற்றிய வீ மேற்கண்டவாறு கூறினார்.
வீ காசி யோங் ….neengal சொல்றது முற்றிலும் உண்மை தான்,….ஆனால் சீனர்களுக்கு எவ்ளோ கொடுத்தாலும் போதவில்லையே…..நாயா பேயா ..அலையிரிங்கேலே…
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். பொதுத்தேர்தலில் ம.சீ.ச.வுக்கு மரண அடி. அதன் காரணமாக, இந்தத் தலைவர் ஓரளவு வாயைத் திறக்கிறார். ம. இ. கா. வும் இவரைப் போன்று கோதாவில் குதித்தால் என்ன? பதவி,பதவி என அலைந்ததை கொஞ்ச காலத்திற்கு மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, இந்தியர்களுக்கு உதவி, உதவி, என கொஞ்சம் இறங்கி வந்து பாருங்களேன்! சமுதாயம் உங்களைப் போற்றிப் புகழும்..
சபாஸ் mca நீங்கள் தைரியசாலிகள்
எங்கே நமது மௌன சாமீ…சுவாமியே ஐயப்பா ஒரே மேலயு ஐயப்பா
ஒரே உம்னோ ஒரே பிரதமர் ஒரே ம இகா அடிமை கட்சி
அப்படி போடு ,,,.உங்களுக்காக அப்படி போடு இளைய தளபதி சாங்கை சமர்பிக்கிறேன்
சீனர்களுக்கு எங்க குடுத்தாங்க .. சீனர்கள் தான் அரசாங்கத்துக்கு வரி குடுத்துருக்காங்க.. சீனர்கள் இல்லைனா, இந்த நாட்டுல தமிழன் கதி அதோ கதிதான். இருக்கோ இல்லையோ.. அவன் அவன் பங்க ஒழுங்கா குடுதிடனும்…
வீ கா சியோங் போன்று ஒரே ஒரு ம இ கா மகன் அறிக்கை விட்டால் எப்படி இருக்கும் ?
நாடு எங்கே போவுது,அரசாங்க திட்டம்,அவை எதிர் காலத்தில் என்ன நன்மை தரும்,என்ன தீமை தரும் என்று யோசிப்பவர் டி .எ .பி பார்டி ஒன்லி.நாம் எங்கே யா யோசிகுறோம்,மலாய் மொழி ஆதிக்கம் நம் தமிழ் பள்ளியில் புகுத்த அரசாங்கம் திட்டம் திடிவிட்டது,எம் ஐ சி என்னா செய்தது.எம் சி எ ஒன்லி எதிர்குது.சோ சோ ன் சோ .மலைய்ஸ்கு மட்டும் யோசிக்கும் இந்த அரசாங்கம் நமக்கு வேணுமா???????????
பூமிபுத்ரா என்று பில்லியன் கணக்கில் அவர்களுக்கு மக்கள் வரி
பணத்தில் இருந்து எடுத்து செலவு செய்கிறார்கள் .அதில்
இந்தியர்கள் ,சீனர்கள் பணமும் அடங்கும் .இவங்கள் அப்பன் வீட்டு
பணத்தை செலவு பன்னவேண்டியதுதனே .
இதுநாள் வரை சொல்லாமல் செய்தார்கள். இன்று நேரிடையாகவே இன வேறுபாட்டை சொல்லியும் எழுதியும் செய்கின்றார்கள். இது மட்டுந்தானே வித்தியாசம்! பிச்சை ஏந்தி பிசையிட்டவனுக்கு துதி பாடும் பிறவிகள் இருக்கும் வரையில் இது தொடரும்.
அது சரி ,,எல்லாமே எதிர்ப்பா அறிக்கை விடுறாங்க ,இந்த ம இ க ஏன் மூடிக்கிட்டு இருக்கு ??? சாரி சாரி ,இவனுங்க அம்னோவுக்கு அல்லக்கை தானே ,மறந்தே போயிட்டேன் …