எந்த மலேசியப் பல்கலைக்கழகமும் 100-வது இடத்துக்குள் இருந்ததில்லை

1 gauthமலாயாப் பல்கலைக்கழகம்(யுஎம்)  ஒரு காலத்தில் தரம் உயர்ந்திருந்து இப்போது தாழ்ந்து போனதாகக் கூறப்படுவது உண்மையல்ல என அதன் துணை வேந்தர் கவுத் ஜஸ்மோன் மறுப்பறிக்கை விடுத்துள்ளார்.

இன்னும் சொல்லப்போனால் கடந்த ஐந்தாண்டுகளில் அதன் தரம் படிப்படியாக உயர்ந்து வந்துள்ளது. QS உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் 2007-இல், 246-வது இடத்தில் இருந்த யுஎம்  2013-இல் 167-வது இடத்துக்கு உயர்ந்துள்ளது.

எந்தக் காலத்திலும் மலேசியப் பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் 100-வது இடத்துக்குள் இருந்ததில்லை.

2004-இல் யுஎம் 89-வது இடத்தில் இருந்ததாக சிலர் வாதிடுகின்றனர். அந்த ஆண்டில் QS மலேசியப் பல்கலைக்கழகத்தில் இருந்த மலாய்க்காரர்-அல்லாத மாணவர்களை அனைத்துலக மாணவர்களாகக் கருதி தப்பான மதிப்பீட்டைச் செய்து விட்டது என்றாரவர்.