சிங்கப்பூரையும் கோலாலும்பூரையும் இணைக்கும் விரைவு-ரயில் சேவை மீது அடுத்த ஆண்டில் இறுதி முடிவு செய்யப்படும் என சிங்கப்பூருக்கான மலேசிய தூதர் உஸ்னி ஸை யாக்கூப் கூறினார்.
ஆண்டுதோறும் தனி இடத்தில் சந்தித்துப் பேசும் வழக்கத்தைக் கொண்டுள்ள பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியான் லூங்கும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கோலாலும்பூரில் சந்திக்கும்போது அதன்மீது முடிவெடுப்பார்கள்.
அச்சேவையால் கோலாலும்பூருக்கும் சிங்கப்பூருக்குமிடையிலான போக்குவரத்து நேரம் 90 நிமிடங்களாகக் குறையும் எனக் கூறப்படுகிறது.
சட்டு புட்டுன்னு ஒரு நல்ல முடிவுக்கு வாங்கப்பா …..எவ்ளோ நாள் இப்டி இழுக்கணும்
இந்த யோசனை மக்களுக்கு நன்மை தான் சீக்கிரம் முடிவு
எடுங்கள் ..