காலஞ்சென்ற முன்னாள் மலாயா கம்முனிஸ்டுக் கட்சித் தலைவர் சின் பெங்கின் உடல் மலேசியாவுக்குள் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதில் பொலீசார் தீவிரமாக உள்ளனர்.
“சின் பெங்கின் உடல் கொண்டுவரப்படுவதைத் தடுக்க எல்லா நுழைவுப்பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன”, என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் நேற்றிரவு டிவிட்டரில் பதிவு செய்திருந்தார்.
சின் பேங்கின் உடல் நம் நாட்டுக்குள் நுழையாதிருக்க போலீசாரின் தீவிர கண்காணிப்பு உடலே புல்லரிக்குது போங்கள்! இதே கண்காணிப்பு போதைபொருள் உள்ளே நுழையாதிருக்கவும்., சுடும் ஆயுதங்கள் நம் நாட்டில் சர்வ சாதாரணமாக இருப்பதையும், தடுத்திருப்பார்கலேயானால் நம் நாடு இன்னும் எவ்வளவோ சுபிட்சமாக இருந்திருக்கும்.
பிணத்தைக் கண்டு அஞ்சும் நமது போலீஸ்காரர்களும், அரசியல்வாதிகளும் என்ன தொடை நடுங்கிகளா? உயிர் போன பின் உடலுக்கு கிடைக்கும் மரியாதை இதுதானோ?
ஆஹா என்ன அட்புதமான கண்காணிப்பு இவரிடம் இருந்து எதும்
வருவாய் கிடைக்கவில்லை போலும் .
சிரிப்புதாண்ட்ட வருது உங்களை நினைத்தால் ,,,நாடு குட்டிச்சுவராக போவது உறுதி
சின் பெங் உடல் மலேசியாவில் அடக்கம் செய்ய இவளவோ கோழைத்தனமா ? அவரும் ஒரு சுதந்திர போராட்ட வாதி என்பதில் சந்தேகமில்லை. மலாயா யூனியன் போல கோமுநிசமும் மனித கேடயமாக பிரிட்டிஷாரிடம் சுதந்திர போராட்டம் நடத்தியது தப்பா? இவர்கள் ஆச்சி வைத்து பாதுகாப்பாக ரோட்டில் போராடினர்ககள் சிங் பெங் காட்டில் போராடினர் இருவர் நோக்கமும் மலாயா சுதந்திரம் தான். சின் பெங் கை சுதந்திர போராளியாக மலேசியா அரசாங்கம் அங்கிகரிக்க வேண்டும் என்று உதுசன் முன்னாள் பிரதான ஆசிரியர் சைட் சஹாரி குரல் கொடுத்துள்ளார். ஒன்னும் தெரியாத இன்றைய நவீன அரசியல் உடான்கள் ஏனோ ஆர்பரிகின்றன. பிரிட்ஷ்காரர்கள் தாம் சின் பெங் கை துரோகியாக பார்த்தார்கள். நாம் சத்து மலேசியாவில் இப்படி தத்து குட்டி அரசியல் அமைச்சர்கள் கூட தீவிர வாதிகள் போல் ஆட்டம் போடுவதுதான் கொடுமை சார்.
ஆமாம் கண்டிப்பாக காவல் துறையினர் கண்ணில் விளக்கெண்னையை விட்டுக்கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும். சின் பேங்கின் உடல் நாட்டிக்குள் வந்து விட்டால் உடல் உயிர்ப் பெற்று பெரிய பூகம்பமே வெடித்து விடும் ஜாக்கிரதை?