இசி, வெளிநாட்டு வாக்காளர்கள் என்ற சந்தேகத்தைத் தீர்த்துவைக்க மறுத்தது: எம்பி குற்றச்சாட்டு

1sanஇன்று பெர்சே தேர்தல் நடுவர் மன்றத்தில் சாட்சியமளித்த கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, வாக்களிப்பு நாளில் ஒரு பேருந்து காணப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆவி வாக்காளர்களாக இருக்கலாம் என்று மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தைத் தீர்த்து வைக்க தேர்தல் ஆணையம்(இசி) மறுத்துவிட்டதாகக் கூறினார்.

“அவர்கள் வாக்களித்தனரா என்பதைக் கண்டறிந்து சொல்ல இசியைத் தொலைபேசியில் அழைத்தேன். அதற்கு இசி, மணி 5-க்கு மேல் ஆகிவிட்டது.  எங்கள் வேலை முடிந்தது  எனக் கூறிவிட்டது”, என்றார்.

தேர்தல் நாளன்று ஆத்திரம் கொண்ட பொதுமக்கள் பண்டமாரானில், ஒரு பள்ளிக்கு அருகில் 18 பயணிகள்- அவர்களில் 17 பேர் வெளிநாட்டவர்,   இருந்த ஒரு பேருந்தைத்  தடுத்து நிறுத்தித் தாக்கிய சம்பவம் பற்றி விவரிக்கையில் சந்தியாகு அவ்வாறு கூறினார்.