பாஸ் பக்காத்தான் ரக்யாட்டில் இருப்பதை ஆலோசிக்க வேண்டும் என்று ஏற்கனவே முன்மொழிந்திருந்த அக் கட்சியின் டேவான் உலாமா, இப்போது அக்கருத்தை மறுபரிசீலனை செய்வதாகக் கூறியிருப்பதை சிலாங்கூர் பாஸ் வரவேற்றுள்ளது.
“பிகேஆருடனும் டிஏபி-யுடனும் ஒத்துழைப்பதால் பாஸுக்கு நட்டம் ஏதுமில்லை. பக்காத்தானில் இருப்பதால் பாஸ் நிறைய பயனடைந்துள்ளது”, என மாநில ஆணையர் டாக்டர் அப்துல் ரனி ஒஸ்மான் கூறினார்.
அக்கட்சி, மலேசியரிடையே இப்போது பெற்றுள்ளதைப் போன்ற வரவேற்பை முன்எப்போதும் பெற்றதில்லை என்றாரவர்.
இதைதான் நாங்கள் ” ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ” என்று சொல்கிறோம் . BN செய்த துரோகங்கள் இந்தியர்களின் மனதை ரணமாக்கிவிட்டது. அந்த வெறுப்பு புயலாய் உருவெடுத்து உங்கள் பக்கம் திரும்பியது. பாஸ் என்றாலே பயந்து ஓடிய சமுதாயம் பாஸ் வேட்பாளரை சுமந்து வெற்றிபெற செய்தது. இங்கே மதம் , இனம் , மொழி என்ற வேற்றுமையை புறம் தள்ளிவிட்டு “ஒற்றுமையே நமக்கு பலம்” என்று கைகொடுத்த சமுதாயத்தை “மதத்தை” காரணம் காட்டி தொலைத்து விடாதீர்கள் !!
பாஸ் ஏற்கெனவே அம்னோவிற்குத் திரும்பியதால் பட்ட அவமானத்தையும் பாதகத்தையும் நினைவிற்கொள்ள வேண்டும். அக்கட்சி இப்பொழுது முஸ்லிம் அல்லாதோர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் அது பாக்காத்தானில் இருந்து, நாடு மென்மேலும் சீரழியாமல் இருக்க பாடுபட வேண்டும். உண்மையான 1 மலேசியா கொள்கையை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.