‘மேல்முறையீட்டில் ஷாபி அரசுதரப்பு வழக்குரைஞராக வாதாடலாம்’

courtஇரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து செய்யப்படும் மேல்முறையீட்டில் வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லா அரசுத்தரப்பைப் பிரதிநிதிக்கலாம்  என முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மூவரடங்கிய நீதிபதிகள் குழுவுக்குத் தலைமை வகித்த நீதிபதி ரம்லி அலி, தீர்ப்பு ஏகமனதானது என்றார்.

அக்குழுவில் இருந்த மற்ற இருவர், நீதிபதி ரொஹானா யூசுப், நீதிபதி ஸவாவி சாலே ஆகியோராவர்.

ஷாபி, அரசுதரப்பு வழக்குரைஞராக முன்னிலை ஆவதற்கு அன்வார் தரப்பு ஆட்சேபணை தெரிவித்திருந்தது.