எரிபொருளுக்கான உதவித் தொகை குறைக்கப்பட்டதால் எரிபொருள் விலை உயர்ந்திருந்தாலும் நாட்டின் பணவீக்கத்தில் அது பெருந் தாக்கத்தை ஏற்படுத்தாது எனக் கருவூலத் தலைமைச் செயலாளர் முகம்மட் இர்வான் செரிகார் அப்துல்லா கூறுகிறார்.
எரிபொருள் விலை உயர்வால் பணவீக்க உயர்வு குறைந்த விகிதத்தில்தான் இருக்கும் என்பது நிதி அமைச்சின் கணிப்பு என்றாரவர். இப்போது 1.7 விழுக்காடாகவுள்ள பணவீக்க விகிதம் 0.2 விழுக்காடு உயர்ந்து 1.9 ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவன் எவளவு சாப்பிட்டனோ கடவுளுக்கு தான் வெளிச்சம்……….!!!!!!!!!!!!!!!
ஒன்னும் தெரியாத பாபா போட்டு கிச்சா தாப்பா.
பெட்ரோல் விலை உயர்வுக்குப் பிறகு அன்றாட அத்தியாவசப் பொருட்களும், இறைச்சி, மீன் மற்றும் காய்கறி விலைகள் தாறுமாறாக உயந்துவிட்டது என்பது இந்த மரமண்டைகளுக்குப் புரியுமா? பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசு உயர்ந்ததானது, அன்றாட வாழ்க்கைச் செலவில் (தினசரி) 3-5 வெள்ளிவரை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது தெரியுமா?