பினாங்கு-கெடா நீர்ப் பிரச்னை நாசி காண்டா விருந்தில் பேசித் தீர்க்கப்படும்

mukrizகெடாவிலிருந்து பெறப்படும் நீருக்கு பினாங்கு கட்டணம் செலுத்த  வேண்டுமா, வேண்டாமா என்று தொடர்கின்ற வாதம்  விரைவில் முடிவுக்கு வரலாம்.

நாசி காண்டா சாப்பிட்டுக்கொண்டே அவ்விவகாரத்தைப் பேசித் தீர்க்கலாம் என பினாங்கு முதலமைச்சர், கெடா மந்திரி புசார் முகிரிஸ் மகாதிருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாசி காண்டா உணவகத்தை முக்ரிஸே தேர்ந்தெடுக்கலாம் என்றும் அவர் சொன்னார்.

இந்த அழைப்புப் பற்றி முக்ரிஸிடம் தெரிவித்தபோது, “எனக்கு ஆட்சேபணை இல்லை. பினாங்கு உணவு எனக்கும் பிடிக்கும்”, என்றார்.

விரைவில் லிம்முக்குக் கடிதம் எழுதப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.