கோலாலும்பூரில் ஒரு மனிதருக்கு நான்கு எலிகள் வீதம் இருக்கின்றன. எலிகளால் ஏற்படும் சுகாதாரக் கேடுகளை விளக்கும் இயக்கத்தைத் தொடக்கிவைத்த மாநகர் மேயர் அஹமட் பீசல் தாலிப் இதனைத் தெரிவித்தார்.
கோலாலும்பூரில் இரண்டு மில்லியன் மக்களுடன் எட்டு மில்லியன் எலிகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என டிபிகேஎல் மதிப்பிட்டிருப்பதாக பெரித்தா ஹரியான் கூறுகிறது.
எலிகளின் பெருக்கத்துக்கு, பொறுப்பற்ற உணவகங்களும் அங்காடிக்கடைகளும் மீதப்படும் உணவுப் பொருள்களையும் சமையல் எண்ணெயையும் கடைகளுக்குப் பின்னேயுள்ள சந்துகளிலும் சாக்கடைகளிலும் ஆறுகளிலும் கொட்டுவதுதான் காரணம் என்று அஹ்மட் பீசல் கூறினார்.
பங்சார் ,பங்சார் உத்தாமா பகுதியில் ஒரு எலி 1kilo தேறும் !
உணவகங்கள் தவறு செகின்றன , அது உங்களுக்கு தெரிகிறது ஆனால் கண்டுக்கொள்ளாமல் விட்டது ஏன்? இரண்டு மில்லியன் மக்களிடம் சாலை அபராதம் எத்தனை பில்லியன் வசூல் செய்யலாம் என்பது தானே மாநகர சேவை/வேலை ?? சுகாதாரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு , மற்ற வழியில் ஆதாயம் தேடுவதே உங்கள் பொழப்பக இருந்தால் வேறு என்ன நடக்கும் ?? உங்களுக்கு காசேதான் கடவுள் ,இன்னும் தேடுங்கள் , நிறைய தேடுங்கள் !! நாற்காலியில் சுகம் காணும் மாநகர பெருச்சாளிகள் இருக்கும்வரை , எலிகளுக்கு கொண்டாட்டம்தான்!!
ஒரு மனிதருக்கு நான்கு எலிகள்என்று கணக்கெடுப்பு நடத்த முடிந்த உங்களால் (டிபிகேஎல்) அந்த எலிகளை ஒழிக்க என்ன செய்ய முடிந்தது?
கே.எல். மக்கள் தொகை இரண்டு மில்லியன். எலிகள் எட்டு மில்லியன். வெளிநாட்டினர் ஒரு மில்லியன். எலிகளால் சுகாதரக் கேடே ஒழிய நாட்டிற்கு கேடு இல்லை. ஆனால் ஒரு மில்லியன் வெளிநாட்டினரால் எதிர்கால நமது சந்ததியினர் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பது நமது அரசின் தற்போதைய கொள்கை.
எலி கணக்கு நல்லாத்தான் இருக்கு. எலிகளைக் கொல்வதற்கு
வழி வகைகளைக் காண்போம்.
இந்த எலிகள் பெருக்கத்துக்கு பொறுப்பற்ற பொதுமக்களும் பாதுகாப்பற்ற குப்பைத்தொட்டிகளும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். கருப்பு பிளாஸ்டிக் பைகளை வாங்கி மீத்துப்போன உணவுகளை அதனுள் போட்டுக் கட்டி குப்பைத் தொட்டியில் போடுவதென்பது பெரிய காரியமில்லை. ஆனால் அதை முறையாக எத்தனை பேர் செய்கிறார்கள். மேலும்,சிலர் குப்பைத் தொட்டிக்குள்ளும் அருகில் சென்று போடுவதில்லை. தூர நின்று வீசுபவர்களே அதிகம் பேர். சுற்றுசூழலைப்பற்றி கவலைப்படாத இவர்களைப் போன்ற்வர்களால் அவர்கள் வீட்டுக்கும் பயனில்லை. இந்த நாட்டுக்கும் பயனில்லை. அவர்கள் வீடுக்குள்ளும் இவர்களைப் போன்றுதான் வருங்கால மன்னர்களும் வளர்வார்கள்.
மற்றவர்கள் சுகாதார சூழ்நிலையில் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்ற பொதுநல நோக்கமே இல்லாத மனிதநேயமற்ற மனிதர்கள்தான் மலேசியகத்தில் வளர்ந்துகொண்டு வருகிறார்கள். எதைஎதையோ பேசுகிறோம் ஆர்பரிக்கிறோம் ஆர்பாட்டஙகள் புரிகிறோம். வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று ஆயுள்விருத்திக்கு பிரார்தனைகள் செய்கிறோம். இந்த மனித உடலில் இயங்கிக்கொண்டு நமக்குப் பேருதவியாய் செயல்புரிந்துகொண்டிருக்கும் சுவாசக் காற்று தூய்மையாய் இருக்க் இந்தச் சுற்றுப்புற் சூழலைப்பற்றி கவலைப்படும் மனிதர்கள் எத்தனைப்பேர். நாமெல்லாம் திங்கிற இனமா இல்லை உண்ணுகிற இன்மா?
இந்த எலிகளைப் பிடிப்பதற்கு ஒரு குழு அமைத்து அதற்கு உதவிநிதியாக லட்சக்கக்ணக்கில் ரிங்கிட்டுகளை ஒதுக்கப்போகிறார்கள். அந்த நிதியை ஆளுமைப்படுத்துவதற்கு அவர்களுக்குள் ஒருவரை SUBSIDI -யாக அவர்களுக்குள் ஒருவரை நியமிக்கத்தான் போகிறார்கள். அப்புறம் என்ன நாடு எலிகள் இல்லாத சுத்தமான நாடாகிவிடும். தெருக்கூத்துகள் அவர்களிடம் பிச்சை வாங்கவேண்டும்.
எலிகள் கொல்லப்படுவதை வன்மையாகை கண்டிக்கிறேன் ,எலி எனது அண்ணன் விநாயகரின் வாகனம் .எங்கே இந்து சங்க தலைவர் மோகன் ஷான்? .உடனே தடுத்து நடவடிக்கை எடுங்கள்.
தம்பி வெள்ளியூர் முருகன் அவர்களே ! மிக சரியாக சொன்னீர்கள் , எலிகளை கொன்று விட்டால் விநாயகர் எதில் பிரயாணம் செய்வார் ? LRT யில் ஏறுவாரா ? MRT கூட தற்போது கட்டுமானத்தில் உள்ளது ! ரிஷி அவர்கள் கோபிக்காமல் இருந்தால் சரி !
வியட்நாம் காரர்களுக்கு டென்டர் விடுங்கள் நிறைய வசூல் ஆகும் .
நாட்டின் சொத்துக்களை கொள்ளை அடிக்கும் முதலைகளை பற்றி பேச ஆளுங்கட்சியினர் யாரும் முன்வருவதில்லை ,ஆனால் ஓநாய் ஊளைஇடுகிறது ,எலி அம்மணமாய் ஓடுகிறது என்றெல்லாம் ஆர்பாட்டம் பன்னி பெரித்தா ஹரியான்,மற்றும் டீவிகளில் செய்திகளை வெளியிட்டு மக்களை திசைத் திருப்பிக்கொண்டே இருப்பார்கள் ,