மலேசியாவில் அரசியல் கட்சிகள் தொழில்களில் ஈடுபடுவதும் நிறுவனங்களை வைத்திருப்பதும் மிகப் பரவலாகவே உள்ளது எனக் கல்வியாளர் ஒருவர் பெர்சேயின் மக்கள் நடுவர் மன்றத்தில் கூறினார்.
“அரசியல் கட்சிகள் பரவலான வர்த்தக ஈடுபாடு கொண்டிருப்பதும் நிறுவனங்களை நடத்துவதும் இந்நாட்டில் மட்டுமே காணக்கூடிய ஒன்றாக தெரிகிறது”, என மலாயாப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல்துறை தலைவர் டாக்டர் டெரென்ஸ் கோமெஸ் காணொளி வடிவில் அளித்த சாட்சியத்தில் கூறினார்.
அப்படிப்பட்ட நிறுவனங்கள் பெரும்பாலும் ஆளும் கட்சிகளுக்குச் சொந்தமானவை.
அரசியலும் வணிகையிலும் மாமனும் மச்சானும் போல அதுவும் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்து பண உறவை ஈயமாக்கி பிறகு உறுக்கி கொள்வார்கள். இந்த 20 தாம் நூற்றாண்டில் டாக்டர் டெரன்ஸ் மிக தாமதமாக ஒரு கண்டுபிடிப்பை முன் வைத்து இருக்கார். நம்ப நாட்டில் துன் ஞான சம்பந்தனை மட்டும் இந்த அரசியல் பண பட்டியலில் இருந்து நீக்கி விடலாம். அவர் உழைப்பு இன்று தே தோ நி நிதி சங்கம் வழி மக்கள் அனுபவிகின்றனர். அவர் குடும்பம் அனாதையாகி விட்டது? மேதைகள் சுக போக வாழ்வில் அந்த தொ புவானையும் ஒரே மகளையும் கண்டு கொள்ளவில்லை. இதை ஏன் எழுதுறேன் என்றால் அரசியலில் இப்படி ஏமாளிகள் இருக்க கூடாது என்று சொல்லறேன். இந்த சமுதாயத்த நல்லா “வெச்சவரு” சாதனை தலைவர் சாமியே வராத வேலு ! டாக்டர் ஓலதுக்கு ஒரு உதாரணம்.
தவறு தவறு. திருப்பி சொல்லவும். இவங்கள் அரசியலுக்கு வருவதே வியாபாரம் செய்யத்தான். இங்கு திறமை சாலிக்கு மதிப்பில்லய், எவனுக்கு எவனை தெரியும் என்பதே முக்கியம்.
மலேசியாவில் ‘MAS’ தேசிய விமான சேவை நிறுவனமாக விளங்கும் போது, ‘AIR ASIA’ எப்படி மேலே வர முடிந்தது? டோனியின் அரசியல் சாணக்கியம்தான். மலாய்காரர்களுக்கு எவ்வளவுதான் தூக்கி, ஊத்தி விட்டாலும் பேரங்காடி தொழிலில் முன்னேற முடியாமல் போனபோது, ஒரு இந்து முஸ்லிம் தலைமையில் ‘மைதீன்’ பேரங்காடி சக்கை போடு போடுவது எப்படி. எல்லாம் அரசியல் ‘connection’ தான். மலேசியாவில் அரசியல் தொடர்பு இல்லாமல் வாணிபம் இல்லை என்ற நிலை மாமக்திர் காலத்தில் இருந்தே ஆட்கொண்டு விட்டது. அறிவாளிகள் குறை சொல்வதில்லை. குறையை நிறையாக்கிக் கொள்வார்கள். மேலே குறிப்பிட்டவர்கள் தத்தம் வாணிபத்தில் வளர்ந்ததும் அவ்வாறே!
‘Anonymous’, அரசியலில் துன் சம்பந்தனார் ஏமாளி என்றால், சமூகத் தொண்டில் அவர் அறிவாளி. ஆதலால்தான், இன்றும் மலேசியா வாழ் இந்தியர்கள் அவரைப் போற்றுகின்றனர். அவர் உயிர் பிரிந்தாலும், பெயர் நம்மிடையே நிலைத்து நிற்கின்றது. மற்ற தலைவர்கள் போல் வாழும்போதே செருப்படி வாங்கவில்லை.
மலாயாப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல்துறை தலைவர் டாக்டர் டெரென்ஸ் கோமெஸ் அவர்களே …..வெறும் பாலர் பள்ளி படித்த எனக்கே இந்த விஷயம் 20 வருஷம் முன்னுக்கே தெரியும் ….நீங்க இம்மா பெரிய படிப்பு படிச்சிபுட்டு இப்போதான் தெரியுதோ. …((ஆமா ஆமா நீயும் ஆளும் கட்சி காசுலே தனே படிச்சி கிளிச்சிருப்ப)) …….
டோனி பெர்னாண்டசும், மைதீன் அவர்களும் அரசியல் இல்லாமலேயே முன்னுக்கு வந்திருப்பார்கள். முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களை எந்த அரசியலும் தடுக்க முடியாது. இங்கு அப்படி ஒரு சூழல் இருப்பதால் தான் டோனி தனது தலைமையகத்தை ஜாக்கர்த்தாவிற்கு மாற்றிகொண்டார். நமது வர்த்தக வளர்ச்சிக்கு அரசியல் பயன் பட்டால் பயன் படுத்திக் கொள்ளலாமே! சாமிவேலுத்தனம் தான் பண்ணக்கூடாது!
சாமிவேலுவும்தான் அரசியல் பன்னான்.. வியாபாரமும் பன்னான்.. ஒன்னும் உருப்படலயே..