பக்காத்தானில் ‘தலைசிறந்த’ தலைவர்கள் உண்டு: முக்ரிசுக்கு நினைவுறுத்து

1-pakatanபக்காத்தான் தலைவர்களை “டைனோசர்கள்” என்று குறிப்பிட்ட முக்ரிஸ் மகாதிரை பிகேஆர் மகளிர் தலைவர் சுரைடா கமருடின் சாடினார். அவர்களுக்குப் பின்னரும் பொறுப்பேற்க  தங்களிடம் “தலைசிறந்த” புதிய தலைமுறை தலைவர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்களை எண்ணித்தான் முக்ரிஸ் போன்றோர் கவலைப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய தலைவர்களில் துணிச்சலாக பேசுவோருக்கு,  பிகேஆர் வியூகத் தலைவர் ரபிஸி ரம்லி,  சிம் ட்ஸே ட்ஸின்,  உதவித் தலைவர் என்.சுரேந்திரன்,  அரசியல் ஆய்வாளர் ஒங் கியான் மிங் போன்றோர் எடுத்துக்காட்டுகள் என சுரைடா கூறினார்.

“முற்போக்கான அணுகுமுறைகளையும் சிந்தனைகளையும் கொண்ட ஆற்றல்வாய்ந்த அடுத்த-வரிசை தலைவர்களைப் பக்காத்தான் பெற்றுள்ளதை அறியாதவர்போல் பேசுகிறார் முக்ரிஸ்”, என்று சுரைடா ஓர் அறிக்கையில் சாடினார்.

அன்வார் இப்ராகிம், லிம் கிட் சியாங், நிக் அசீஸ் நிக் மாட் முதலான எதிர்தரப்புத் தலைவர்கள் என்றென்றும் இருக்கப்போவதில்லை என்ற அர்த்தத்தில் அவர்களை “டைனோசர்கள்”என்று முக்ரிஸ் குறிப்பிட்டிருந்தார்.