அம்னோ உதவித் தலைவர் பதவிக்கான தேர்தல் அறுமுனை போட்டியாக மாறலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில், இருக்கும் நிலை தொடர்வதே கட்சிக்கும் உறுப்பினர்களுக்கும் நல்லது என்று நடப்பு உதவித் தலைவர்கள் மூவரும் கூறினர்.
அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, ஹிஷாமுடின் உசேன், முகம்மட் ஷாபி ஆகிய அம்மூவரும் புத்ரா உலக வாணிக மையத்தில் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்கள்.
தாங்கள் மூவரும் ஒருவர் மற்றவருடன் ஒத்துழைப்பது வசதியாக இருக்கிறது என்று ஷாபி கூறினார்.
“அதற்காக நாங்கள் ஓர் அணியாக செயல்படுவதாக நினைக்க வேண்டும். அம்னோவில் அணியெல்லாம் கிடையாது”, என்றாரவர்.
பொதுத்தேர்தல்களில் அம்நோவினர் கையாண்ட யுக்திகள் கட்சித்தேர்தல்களிலும் பிரதிப்பளிக்கறது. அதாவது, பொதுத்தேர்தல்களில் தேசிய முன்னணி வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற வேண்டுமாயின் நிறைய சுயேச்சை வேட்பாளர்களை உருவாக்கிட வேண்டும். அந்த போதனைத்தான் இதுவும். நிறைய வேட்பாளர்கள் போட்டி போடும் பட்சத்தில், ஒரு சிலர் வாபஸ் பெற பெட்டிகளும் கைமாறுவதுண்டு. இப்படித்தான், 15-1-1996 ம் அன்று பகாங் மாநிலத்தின் லிப்பிஸ் நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு இடைத்தேர்தல். இதில் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட மூன்று இந்தியர்கள் சென்றிருந்தனர். இவர்களை போட்டியிடாமல் தடுத்தது மல்லாமல் அவர்கள் கைகளில் கத்தை கத்தையாக நோட்டுகள் திணிக்கப்பட்டன. இந்த லஞ்சத்தை வழங்கியவர் வேறு யாருமல்ல, மாண்புமிகு முன்னாள் பகாங் மந்திரி புசாரும், பின்னர்,பாதுகாப்பு அமைச்சருமாகிய ராஜ போக, ராஜ மார்த்தாண்ட, அப்துல் ரசாக்கின் மகனாகிய, இன்று 31 பில்லியன் வெள்ளியை வந்தேறிகளுக்கு அள்ளி வழங்கிய நஜி……!
மகாதீரின் மகனை மீண்டும் தோற்கடிக்கப்பட்டு அம்னோவில் தாத்தா அப்பன் பிள்ளை அரசியல் அடக்கபட வேண்டும். அதே வேளையில் அதிக திமிரா பேசும் நஜீபின் ஆபீஸ் பாய் ஒரு மமதை டாக்டர் தோற்க வேண்டும்.